| சிஞ்சுவாடியும்... சிதையும் கோவிலும்! தான நிலங்கள் ஆக்கிரமிப்பால் பரிதாபம் Dinamalar
சிஞ்சுவாடியும்... சிதையும் கோவிலும்! தான நிலங்கள் ஆக்கிரமிப்பால் பரிதாபம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 மே
2019
22:09

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பையும், கோவில் பராமரிப்பையும், அறநிலையத்துறை கண்டுகொள்ளாததால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.பொள்ளாச்சி பகுதி கிராமங்கள், பல்வேறு வரலாற்றுச்சுவடுகளையும் உள்ளடக்கியுள்ளது.


அங்குள்ள பழமை வாய்ந்த கோவில்களில், வழிபாடு நிலைத்திருக்கவும், பராமரிப்பு உட்பட அனைத்து பணிகளுக்கும், அப்போதைய ஆட்சியாளர்களால், மானியமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த நிலங்கள் பெரும்பாலும், ஆக்கிரமிக்கப்பட்டு, கோவில் பராமரிப்பும் கண்டுகொள்ளப்படுவதில்லை.இவ்வாறு, நிலங்கள் மாயமாகி, கோவில்களும் பராமரிக்கப்படாத அவல நிலைக்கு சிஞ்சுவாடி கோவில்களும், உதாரணமாக மாறியுள்ளன. பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடியை தலைமையிடமாக கொண்ட ஆட்சி செய்த பாளையக்காரர்கள் காலத்தில், பல்வேறு கோவில்கள் கட்டப்பட்டன.


குறிப்பாக, பாளையக்காரர் ஜம்ப நாயக்கர் காலத்தில், வரதராஜப்பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், மாலப்பட்டி பெருமாள் கோவில், விநாயகர், சிறுதுாண்டி அம்மன் உட்பட கோவில்கள் கட்டப்பட்டு, நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலங்கள், சிஞ்சுவாடி, கோலார்பட்டியில் உள்ளதாக ஆவணங்கள் மட்டுமே உள்ளன.


மற்றபடி, இந்நிலங்கள் இந்து அறநிலையத்துறையால், ஏலம் விடப்படுவதுமில்லை; கோவில்களும் பராமரிக்கப்படுவதில்லை.இவ்வாறு, இப்பகுதியில், மட்டும், 136 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டது.


இதையடுத்து, கோவில் நிலங்களை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தி, பொது ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் வருவாயில், கோவில்களை பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.முதற்கட்டமாக, கோவிலுக்கு சொந்தமான நிலங்களை சர்வேவாரியாக கண்டறிந்து இந்து அறநிலையத்துறை சார்பில், தகவல் பலகை வைக்க வேண்டும் என கோவை கலெக்டருக்கு மனு அனுப்பபட்டுள்ளது.இந்து மக்கள் கட்சி செய்தி தொடர்பாளர் ரமணன் கூறுகையில், ''சிஞ்சுவாடியில் பழமை வாய்ந்த கோவில்களின் நிலங்களை மீட்டெடுக்க வேண்டும். நிலங்களை குத்தகைக்கு விட்டு, கோவில்களை புனரமைத்து கும்பாபிேஷகம் நடத்த வேண்டும்.


அதிகாரிகள், மெத்தனம் காட்டாமல் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், மக்கள் ஒருங்கிணைப்போடு, பல்வேறு போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்!இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சிஞ்சுவாடியில் உள்ள கோவில்களின் பெயரில் உள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.


இதற்காக செயல் அலுவலர் நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை கோவில்களிடம் ஒப்படைக்க கோரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கோவில் நிலங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X