| தண்ணீர் தொட்டியில் விழுந்து காட்டெருமைக் குட்டி பலி Dinamalar
தண்ணீர் தொட்டியில் விழுந்து காட்டெருமைக் குட்டி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 மே
2019
00:35

பெ.நா.பாளையம்:ஆனைகட்டி அருகே விலங்குகளுக்காக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில், காட்டெருமை குட்டி விழுந்து இறந்தது.கோவை ஆனைகட்டி ரோட்டில் சலீம் அலி மையம் அருகே வனத்துறை கட்டிய தண்ணீர் தொட்டியில், நீர் அருந்த காட்டெருமை குட்டி வந்தது. எதிர்பாராமல் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது.


தொட்டியில் இருந்து மேலே வர முடியாமல் தவித்த காட்டெருமை குட்டியை அப்பகுதியில் இருந்த பழங்குடியினர் பார்த்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், கயிறு கட்டி குட்டியை மீட்டனர். ஆனால், நீண்ட நேரம் தண்ணீர் தொட்டியில் இருந்து மீள முடியாமல் போராடியதால், குட்டியின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. சோர்ந்து காணப்பட்ட குட்டி, சிறிது நேரத்தில் இறந்தது.


இது குறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,' விலங்குகளுக்கான தண்ணீர் தொட்டி பராமரிக்கப்படுவதில்லை. இதனால் தொட்டியில் பாசிப்படர்ந்து உள்ளது. மேலும், விலங்குகளுக்காக வடிவமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் விலங்குகள் விழுந்து உயிரிழக்காமல் இருக்கும்படி, தண்ணீர் தொட்டிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X