சீக்கிரம் கிளம்புங்க! உக்கடம் - பொள்ளாச்சி மார்க்கத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

27 மே
2019
02:04
பதிவு செய்த நாள்
மே 27,2019 00:43

கோவை:-உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணி முழு வீச்சில் துவங்கவுள்ளதால், உக்கடத்தில் இன்று முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. பள்ளி, கல்லுாரி, அலுவலகம் செல்வோர், முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது நல்லது.கோவை உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரையிலான, 1.97 கி.மீ., தொலைவுக்கு, 121 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி, கடந்தாண்டு ஏப்ரலில் துவங்கியது.


முதல் கட்டமாக, ஏற்கனவே இருந்த சாலையின் மத்தியில், 52 இடங்களில் ராட்சத தாங்கு துாண்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இவற்றில் பெரும்பாலான துாண்கள் கட்டப்பட்டு விட்டன.முக்கிய பணி துவக்கம்அவற்றின் மீது நிறுவுவதற்காக, பிரமாண்ட கான்கிரீட் 'கர்டர்'கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அவற்றை துாக்கி, துாண்கள் மீது நிறுத்தும் பணியை மேற்கொள்ள, திட்டமிட்டுள்ள அதிகாரிகள், இன்று முதல் உக்கடம்- ஆத்துப்பாலம் இடையிலான வாகன போக்குவரத்தை முற்றிலும் நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.பாலம் கட்டும் பணி துவங்கியதில் இருந்தே, உக்கடத்தில் இருந்து, ஆத்துப்பாலம் செல்வதற்கு மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.


எதிர் திசையில், கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.இலகுரக வாகனங்கள் மட்டும், பெரிய குளக்கரை சாலையில் அனுமதிக்கப்படுகின்றன. கனரக வாகனங்கள், குனியமுத்துார் அரசுப்பள்ளி எதிர்ப்புறம் இருந்து செல்லும், புட்டுவிக்கி சாலையில் சென்று, பேரூர் பைபாஸ் வழியாக, உக்கடம் சென்றடைகின்றன.


இன்று முதல் மாற்றம்


இந்நிலையில், இன்று முதல், உக்கடத்தில் இருந்து, ஆத்துப்பாலம் வரும் வழியிலும், வாகன போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. உக்கடம் சந்திப்பில் இருந்து, பாலக்காடு சாலை மற்றும் பொள்ளாச்சி சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள், உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை, புட்டுவிக்கி சாலை, சுண்ணாம்பு காளவாய் வழியாக, பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி ரோடு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இரு சக்கர வாகனங்களுக்கும் விலக்கில்லை.இந்த மாற்றத்தால், உக்கடம் சந்திப்பில் இன்று முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரி, அலுவலகம் செல்வோர், முன்கூட்டியே திட்டமிட்டு புறப்பட்டுச் செல்வது நல்லது.போக்குவரத்து போலீசார், கூடுதல் எண்ணிக்கையில் அலுவலர்களை பணியமர்த்தி, நெரிசலை உடனுக்குடன் சீர் செய்ய, தகுந்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.


ஒரே ஒரு ஆறுதல்கோவை வாகன ஓட்டிகளுக்கு, பெரும் ஆறுதலாக இருப்பது, உக்கடம், பெரிய குளக்கரையின் மீது அமைக்கப்பட்டுள்ள சாலை தான். இந்த சாலையும் இல்லாவிடில், ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் செல்வதற்கு, இரு சக்கர வாகன ஓட்டிகளும், புட்டுவிக்கி சாலை வழியாக சுற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கும். இன்று முதல் துவங்கவிருக்கும், போக்குவரத்து மாற்றத்திலும், இந்த குளக்கரை சாலை மீதான போக்குவரத்து அனுமதிக்கு, எந்த இடையூறும் இல்லை என்பதே, வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலான விஷயம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
27-மே-201911:42:48 IST Report Abuse
இந்தியன் kumar இன்னும் நிறைய வளர்ச்சி பணிகள் நடக்கும் அடுத்த லோகசபா தேர்தலில் நேர் மாற்றம் நிகழும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X