ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் பைகள் தாராள புழக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
01:27

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தங்கு தடையின்றி உள்ளது. மாவட்ட நிர்வாகம் மந்த நிலையில் உள்ளதால் அதிகாரிகளும் இதனை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பைகள் தாராளமாக புழக்கத்தில் உள்ளது.



பிளாஸ்டிக் தடைதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை 2018 ஜூன் 5 ல் சட்டசபையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமியால் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை அரசு கெஜட்டில் ஜூன் 15 ல் வெளியிடப்பட்டது. 2019 ஜன., 1 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் மாற்று ஏற்பாடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.



தடைவிதிக்கப்பட்டதும் அதிகாரிகள் கடைகள்,வணிக நிறுவனங்களில் தொடர்ந்து ஆய்வுநடத்தி நடவடிக்கை எடுத்து வந்தனர். பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. கடைகளில் தொடர் கண்காணிப்பு இருந்ததால், பிளாஸ்டிக் பயன்பாடுகுறைந்தது. ஒரு கட்டத்தில் மக்களே மஞ்சள் துணி பைகளை கொண்டு வரும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டது.கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைஅனைத்து இடங்களில் உள்ள வர்த்தக சங்கள், மற்றும் வணிகர்கள் பிளாஸ்டிக் தடையை பின்பற்றினர். அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாத நிலையில், தற்போது மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தலை துாக்க ஆரம்பித்துள்ளது. கழுதை தேய்ந்துகட்டெறும்பான கதையாக பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை என்பது படிப்படியாக தளர்ந்து வருகிறது. தற்போது பல் வேறுவர்த்தகர்கள் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.



டீக்கடைகளில் பிளாஸ்டிக் கவரில் டீ போடுகின்றனர். தெருவோர கடைகளில் தாராளமாக பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்துகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், மீண்டும் மக்கள் வாழ்க்கையில் நீக்கமற பிளாஸ்டிக் பயன்பாடு தொடரும் நிலைஉள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து தங்களது கண்காணிப்புபணிகளை துவக்குவதோடு பறிமுதல், அபராதம் போன்ற நடவடிக்கைகளை தொடர வேண்டும்.காய்கறி மார்க்கெட்டுகள், இறைச்சி, மீன்விற்பனையாளர்கள், பூ மாலை விற்பனை செய்பவர்கள், இனிப்பு, பேக்கரிகள், ஒருசில ஓட்டல்களில் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த துவங்கி விட்டனர். முதலில் பயந்து மறைமுகமாக விற்றவர்கள் அதிகாரிகளின் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை இல்லாததால் திறந்த வெளியில் தாராளமாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும்நிலை ஏற்பட்டுள்ளது.



மண்டபங்களில் மாற்றம்:


திருமணம், விழா , நிகழ்ச்சிகளை மண்டபங்களில் நடத்துபவர்கள் முகூர்த்த நாட்களில் வாழை இலை தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் மீண்டும் பழைய பிளாஸ்டிக் இலைகளை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மறைமுகமாகமொத்த விற்பனையாளர்கள் இவர்களுக்கு பிளாஸ்டிக் இலைகள், டம்ளர்கள், போன்ற பொருட்களை ரகசியமாக விற்பனை செய்து விடுகின்றனர். ஒரே இடத்தில் மொத்தமாக விற்பனை செய்யப்படுவதால், சத்தமின்றி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை ஜோராக நடக்கிறது.



பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வந்தாலும், மாற்றுப்பொருட்கள் தயாரிப்பில் அரசும், அதிகாரிகளும் ஊக்கப்படுத்தவில்லை. பனை ஓலைப்பொருட்கள், பாக்கு மட்டை தட்டுகள், தேக்கு இலையை ஓட்டல்களில் பயன்படுத்துதல், பீங்கான், , கண்ணாடி பொருட்களை பயன்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில்வர் டம்ளர்கள் பயன்பாடு இல்லை.மானிய கடன்கள் தேவைமாற்றுப்பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு மானியகடன்களை வங்கிகள் மூலம் பெற்றுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுப்பொருட்கள் பயன்பாட்டிற்கு வந்தால் மட்டுமே மக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாடுகுறையும். என்னதான் தடைகள் விதித்தாலும், அதற்கான மாற்று திட்டங்களையும் அதிகாரிகள் செயல்படுத்துவதில் அக்கறைகாட்டுவதில்லை.



ஏற்கனவே பயன்படுத்திய கேரி பேக்குகளை இன்றும் மக்கள் வீடுகளில் பத்திரப்படுத்தியுள்ளனர். அவர்கள் பொருட்கள் வாங்குவற்குபழைய கேரி பேக்குகளை பயன்படுத்துகின்றனர். அப்படி பயன்படுத்திய பின் குப்பையில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதிலும் அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. இதனால் இன்றும் குப்பை தொட்டிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.மக்களிடம் அக்கறையில்லைபிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்கப்பட்டதற்கான காரணமும், அதற்கான விழிப்புணர்வும்மக்களை சென்றடையவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், மக்கள் மனத்தில் மாற்றம் வர வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் இன்று வரை செய்யப்படவில்லை.



பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் மக்களிடம் அபராதம் விதிக்கும் நிலை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் மக்களிடையே பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது, என்ற மன மாற்றம் ஏற்படும்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X