அடிப்படை வசதிகள் இல்லாத அரசுப்பள்ளி ஐந்து ஆண்டுகளாக 100 சதம் தேர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
01:27

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையிலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



இளஞ்செம்பூர் கிராமத்தில் 2007ல் அரசு உயர்நிலைப்பள்ளி துவக்கப்பட்டது. பள்ளியில் இளஞ்செம்பூர், கண்டலான், அஞ்சதம்பல், பூக்குளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 108 மாணவர்கள் படிக்கின்றனர்.இங்குள்ள தொடக்கப்பள்ளி கட்டடம் சேதமடைந்து இடிந்து விழுந்தது. உயர்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டடத்தில் துவக்கப்பள்ளி இயங்குகிறது. தேவையான வகுப்பறை கட்டட வசதி இல்லாததால் மரத்தடியிலும், மகளிர் மன்ற கட்டடத்திலும் பாடம் நடத்தி வந்தனர்.அடிப்படை வசதிகளான தண்ணீர், கழிப்பறை, சுற்றுச்சுவர்வசதிகள் இல்லாமல் உள்ளது.மாணவர்கள் கூறுகையில், 'உயர்நிலைப்பள்ளியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி ஆசிரியர்கள் விடுமுறை நாட்களிலும் வந்து பாடம் நடத்தினார்கள். இதன் பலனாக தொடர்ந்து 5 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளனர்,' என்றனர்.மாணவர்களின் நலன்கருதி வரும் கல்வி ஆண்டில் பள்ளிக்கு தேவையான தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X