| பள்ளியில் பொருட்கள் திருட்டு போகும் அபாயம் Dinamalar
பள்ளியில் பொருட்கள் திருட்டு போகும் அபாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 மே
2019
01:28

ராமநாதபுரம் : களிமண்குண்டு அரசு தொடக்கப்பள்ளியில் பராமரிப்பில்லாத கதவை பெயருக்கு பூட்டி விட்டு விடுமுறையில் ஆசிரியர்கள் சென்றதால் சேர்கள், பெஞ்சுகள் திருட்டு போகும் அபாயம் உள்ளது.



திருப்புல்லாணி ஒன்றியம் களிமண்குண்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஏப்., மாதம் பாதியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் விடுமுறைக்கு சென்ற ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளியின் கதவை பராமரிக்காமல் பெயருக்கு பூட்டிவிட்டு சென்றுள்ளனர். கதவுக்கு கொண்டி இல்லாததால் தற்போது மாணவர்கள் பயிலும் வகுப்பறை, தலைமை ஆசிரியர் அறை அனைத்தும் திறந்து கிடக்கிறது.இதன் அருகிலுள்ள மற்றொரு தொடக்கப்பள்ளி கட்டடத்தில் மதில் சுவர் ஏறி குதித்து அங்குள்ளவர்கள் இளைப்பாறி வருகின்றனர். மாணவர்கள் உபயோகிக்கும் பல ஆயிரம் மதிப்புள்ள பெஞ்சுகள், சேர்கள் இதனால் திருட்டு போகும் அபாயம் உள்ளது. தொடக்கப்பள்ளியில் உள்ள கழிப்பறையை மாணவர்கள் பயன்படுத்த முடியாத அளவில் சேதமடைந்துள்ளது. பள்ளியை பராமரிப்பின்றி விட்டுச் சென்ற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X