வத்திராயிருப்பில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
02:03

வத்திராயிருப்பு: மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் வத்திராயிருப்பில் நடந்த ஜல்லிக்கட்டில், மாடுகள் முட்டியதில் 21 பேர் காயம் அடைந்தனர்.



வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயிலில் பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று காலை 8:20 மணிக்கு வாடிவாசல் மற்றும் மாடுபிடி வீரர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. மாடுபிடி வீரர்கள் ஜல்லிகட்டு உறுதிமொழி எடுத்தபின், வாடி வாசலில் இருந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மாடுகள் மட்டுமின்றி விருதுநகர், மதுரை, தேனி, திருச்சி பகுதிகளிலிருந்து 240 க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. அப்பகுதிகளைச் சேர்ந்த 170 மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின் மாடுபிடிக்க அனுமதிக்கபட்டனர். வாடிவாசல் வழியாக திமிறி வந்த காளைகளை, வீரர்கள் சிறிதும் அஞ்சாமல் பாய்ந்து சென்று மடக்கினர். இதனை திரண்டிருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். இதில் 12 மாடுபிடி வீரர்கள், 9 மாட்டு உரிமையாளர்கள் என 21 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு டாக்டர் ஜெயராம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர். இதில் ஈஞ்சார் சங்கிலிமுருகன் 22, தேனி மதன்குமார்24, மதுரை ராஜபாண்டி 25 உட்பட 6 பேர் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு சிகிச்சை பெற்றனர். விழாவில் சிவகாசி ஆர்.டி.ஓ., தினகரன், தாசில்தார் சரஸ்வதி மற்றும் கால்நடைத்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவத்துறை மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், குத்துவிளக்கு, சுவர் கடிகாரம்,வெள்ளிக்காசு உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. நண்பகல் 12:30 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. ஸ்ரீவில்லிபுத்துார் டி.எஸ்.பி.,ராஜா, இன்ஸ்பெக்டர் சிவசக்தி, மூக்கன் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை முத்தாலம்மன் ஜல்லிகட்டு விழாக்குழு மற்றும் வத்திராயிருப்பு காளை வளர்ப்போர் அமைப்பினர் செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X