தண்ணீர் தட்டுப்பாடால் திணறும் திருச்சுழி: பொதுமக்கள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
02:04

காரியாபட்டி : திருச்சுழியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நுாறுநாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் நீர்நிலைகளை துார்வார வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். திருச்சுழி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, காரியாபட்டி பகுதி பெரிய கண்மாயான கட்டுக்குத்தகை கரிசல்குளம் கண்மாய்க்கு வரும் நீர் வழித்தடங்கள் காணாமல் போயின. குண்டாற்றில் கட்டப்பட்ட சென்னம்பட்டி கால்வாய் வழித்தடம், கண்மாய்களை சுற்றியுள்ள சிறு ஓடைகளின் நீர் வழித்தடங்களும் துார்ந்து போயின. இந்த கண்மாய் நிறைந்தால், 10 கி. மீ., சுற்றியுள்ள கிராமங்கள் பயன்பெறும். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. இந்த கண்மாய் நிறைந்து பல வருடங்கள் ஆகின. இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் 600 அடி முதல் 1000 ம் அடி வரை ஆழ்துளை போட்டும் தண்ணீர் வரவில்லை. அதே போல் நரிக்குடி பகுதியில் மீனாக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் முற்றிலும் தண்ணீருக்காக மக்கள் அலைகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் இந்த பகுதி பாலைவனமாக மாறும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் உள்ள ஆறு, குளம், குட்டை, ஊரணி, கண்மாய்களுக்கு வரும் நீர் வரத்து ஓடைகள் , வாறுகால்களை மழைக்காலத்திற்கு முன் தூர்வார வேண்டும். நீர்நிலைகள் நிரம்பினால் கால்நடைகள், விவசாயம் செழிக்கும். போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில், நுாறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களை நீர்நிலைகளை துார்வார பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்றுகின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X