| விழிப்புணர்வு இல்லையே! திறந்தவெளியால் தீரா நோய்கள் அதிகம்; தனிநபர் கழிப்பறையில் கவனம் தேவை Dinamalar
விழிப்புணர்வு இல்லையே! திறந்தவெளியால் தீரா நோய்கள் அதிகம்; தனிநபர் கழிப்பறையில் கவனம் தேவை
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 மே
2019
02:09

நரிக்குடி : திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதாரக்கேடை தவிர்க்க, முழுசுகாதார திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட, தனிநபர் கழிப்பறையை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.



மாவட்டத்தில், திறந்தவெளி கழிப்பறையால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு, தொற்று கிறுமிகள் பரவி, பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. மத்திய அரசு 'ஸ்வாச் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ், மாநில அரசு பங்களிப்புடன்,முழு சுகாதார திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்ட, சிறு, குறு விவசாயிகள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இத்திட்டத்தில், தகுதியானவர்கள் உட்பட தகுதியற்றவர்களும் தேர்வு செய்யப்பட்டு, ஏற்கனவே வீடுகளில் கட்டியிருந்த கழிப்பறைக்கு முன் போட்டோ எடுத்து, பயன்பெற்றனர்.



பெரும்பாலானோர் தரமில்லாமல் கழிப்பறை கட்டியதால், சில நாட்களிலே சேதமடைந்தது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டது. இதில் நுாறு சதவீதம் நிறைவேற்றப்பட்ட ஊராட்சிகள் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்து, சிறப்பு நிதி ரூ.2 லட்சம் வழங்கி, அரசு ஊக்குவிக்கிறது. இந்நிலையில் தனிநபர் கழிப்பறை பயன்பாடு குறைந்து, மீண்டும் திறந்தவெளியை நாடுவதால், தொற்று கிருமிகள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதாரக்கேடு ஏற்படாமல் தவிர்க்க தனிநபர் கழிப்பறையை சீரமைத்து பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.



அரசு நிதி வீணாகுது:


ஒப்பந்த அடிப்படையில் கட்டப்பட்ட தனிநபர் கழிப்பறை குறுகிய காலத்திலே சேதமடைந்தது. தொடர்ந்து பயன்படுத்தியிருந்தால் ஓரளவிற்கு பராமரித்திருப்பர். போதிய விழிப்புணர்வு இல்லாததால் தனிநபர் கழிப்பறையை பயன்படுத்தப்படவில்லை. திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் தொற்று கிருமிகள் காற்றில் பரவி, பல்வேறு நோய்கள் உருவாக காரணமாக இருக்கிறது. தனிநபர் கழிப்பறை கட்ட பல கோடி நிதி ஒதுக்கியும், முறையாக கட்டவில்லை. தனி நபர் கழிப்பறை அவசியத்தை உணர்த்து, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.-- மூர்த்திக்குமார், விவசாயி, நாலுார்

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X