| சொக்கம்பாளையம் அரசு பள்ளி மீது கல்வித்துறை கவனம் செலுத்துமா? Dinamalar
சொக்கம்பாளையம் அரசு பள்ளி மீது கல்வித்துறை கவனம் செலுத்துமா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 மே
2019
02:19

அன்னுார்;அன்னுார் வட்டாரத்தில் அன்னுார், சொக்கம்பாளையம், ஆணையூர், காட்டம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இத்துடன் கெம்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, தற்போது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.


இந்நிலையில் அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்தது குறித்து பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து பெற்றோரகள் கூறியதாவது: தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், சராசரியாக அரசு பள்ளிகளில் பெற்ற தேர்ச்சியை விட அன்னுார், சொக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி குறைவாகவே தேர்ச்சி பெற்றன. ஆனால் அன்னுார், சொக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மாநில சராசரியை விட மிக குறைவாகவே தேர்ச்சி பெற்றுள்ளது.


இதனால், அன்னுார் வட்டாரத்திலுள்ள துவக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் படித்தபின் அன்னுார், சொக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வர மாணவர்கள் தயங்குவதோடு தவிர்க்கும் நிலை உள்ளது. இவ்விரண்டு பள்ளிகளிலும் பொதுத்தேர்வில் கூடுதல் தேர்ச்சி பெற மாவட்ட மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X