| குன்னூரில் பழக்கண்காட்சி நிறைவு: சிறந்த அரங்குகளுக்கு பரிசு Dinamalar
குன்னூரில் பழக்கண்காட்சி நிறைவு: சிறந்த அரங்குகளுக்கு பரிசு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 மே
2019
02:23

குன்னுார்:குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 61வது பழக்கண்காட்சி நிறைவு பெற்றது. சிறந்த அரங்குகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நீலகிரி மாவட்டத்தில், கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 61வது பழக்கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது. நிறைவு நாளான நேற்று, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.சிறந்த அரங்குகள் மற்றும் தோட்டங்கள் பராமரித்த போட்டியாளர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது.


மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்தார். உதவி கலெக்டர் ரஞ்சித் சிங், சிறந்த அரங்குகள் அமைத்த, போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.சிறந்த தோட்டம் பராமரிப்புக்கு குன்னுார் முஜிபுர் ரகுமான், முத்தையா மற்றும் குன்னுார் ஜோசப் பள்ளிக்கு, முறையே முதல் மூன்று பரிசு உட்பட, ஏழு சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன. சிறந்த பழத்தோட்டத்துக்கு, நான்கு பரிசுகள் உட்பட மொத்தம், 55 பரிசுகள் வழங்கப்பட்டன.இதில், தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், சிம்ஸ் பூங்கா மேலாளர் கோபால், உதவி இயக்குனர் பெபிஷா மற்றும் குன்னுார் டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X