பொள்ளாச்சி அருகே யானை தாக்கி இருவர் பலி: எம்.எல்.ஏ., வை முற்றுகையிட்ட மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
02:24

ஆனைமலை:பொள்ளாச்சி அருகே, நவமலையில், யானை தாக்கி இறந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க சென்ற எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகளை, பழங்குடியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நவமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மாகாளி, 55. நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக துாங்கிகொண்டிருந்தார். நள்ளிரவு அங்கு வந்த ஒற்றை ஆண் யானை அவர் வீட்டினுள் இருந்த உணவுப்பொருட்களை உட்கொண்டது. சப்தம் கேட்டு அவர் வெளியில் வரும்போது, தும்பிக்கையால் தாக்கி, அவரை இழுத்து வீசியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.அவரது வீட்டுக்கு அருகே, 24ம் தேதி வேட்டைத்தடுப்பு காவலர் முருகனின் மகள் ரஞ்சனா, யானை தாக்கி இறந்தார். இந்நிலையில், இறந்துபோன மாகாளியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க, வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி, டி.எஸ்.பி., விவேகானந்தன், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து உள்ளிட்டோர், நேற்று நவமலை சென்றனர்.அப்போது, வனத்துறையினர் அலட்சியத்தால் தொடர்ந்து உயிர்பலி ஏற்படுகிறது எனக்கூறி, அங்குள்ள பழங்குடியினர், அதிகாரிகள்,எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து, ''டாப்சிலிப்பில் இருந்து, இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு, காட்டு யானை விரட்டப்படும். யானைகள் ஊரினுள் நுழையாமல் இருக்க கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்,'' என உறுதியளித்தார். இதனால், சமரசமடைந்த பழங்குடியினர் போராட்டத்தை கைவிட்டனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X