| மருத்துவக் கல்லுாரி மாணவர் பைக் திருட்டு Dinamalar
மருத்துவக் கல்லுாரி மாணவர் பைக் திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 மே
2019
02:43

புதுச்சேரி: மருத்துவ கல்லுாரி மாணவரின் பைக்கை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.புதுடில்லியை சேர்ந்தவர் டேப்பர் முகர்ஜி மகன் சந்திரமவுலி முகர்ஜி,23; இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 25ம் தேதி, தனது நண்பரின் பல்சர் பைக்கை, ஜிப்மர் வளாகத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, பைக்கை காணவில்லை. இதன் மதிப்பு 40 ஆயிரம் ரூபாய்.இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து, பைக்கை திருடி சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X