| அமைச்சர் ஷாஜகானிடம் முதல்வர் நலம் விசாரிப்பு Dinamalar
அமைச்சர் ஷாஜகானிடம் முதல்வர் நலம் விசாரிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 மே
2019
02:44

புதுச்சேரி: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் ஷாஜகானை முதல்வர் நாராயணசாமி சந்தித்து நலம் விசாரித்தார்.புதுச்சேரி வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் ஷாஜகான் கடந்த 24ம் தேதி திடீரென நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார்.உடன் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.முதல்வர் நாராயணசாமி, நேற்று சென்னை, அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அமைச்சர் ஷாஜகானை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது உடல் நிலை நன்றாக உள்ளதாக சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X