| ஹீமோபிலியா சங்க 25 ஆண்டு சேவையில் கொடையாளர்களின் பங்கு முக்கியம், வெள்ளி விழாவில் டாக்டர் நளினி பெருமிதம் Dinamalar
ஹீமோபிலியா சங்க 25 ஆண்டு சேவையில் கொடையாளர்களின் பங்கு முக்கியம், வெள்ளி விழாவில் டாக்டர் நளினி பெருமிதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 மே
2019
02:45

புதுச்சேரி: ஹீமோபிலியா சங்கத்தின் 25 ஆண்டுகால சிறப்பான மருத்துவ சேவைக்கு, மனிதாபிமானம் மிக்க கொடையாளர்களின் பங்கு முக்கியமானது என, சங்கத்தின் தலைவர் டாக்டர் நளினி பெருமிதத்துடன் கூறினார்.புதுச்சேரி ஹீமோபிலியா சங்கம் துவங்கி 25 ஆண்டு ஆவதை தொடர்ந்து வெள்ளி விழா கொண்டாட்டம், ஜிப்மர் கலையரங்கில் நேற்று நடந்தது. இந்திய ஹீமோபிலியா இணைய தலைவர் விகாஸ் கோயல் தலைமை தாங்கினார். ஸ்ரீ பாலாஜி வித்யா பீடம் துணைவேந்தர் சுபாஷ் சந்திர பரிஜா, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். துணை சபாநாயகர் சிவக்கொழுந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.தேசிய சுகாதார சங்க இயக்குனர் மோகன்குமார், சற்குரு ஓட்டல் உரிமையார் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர்கள் ரங்கநாத், ஜெகநாத், அமர்நாத் உள்ளிட்டோர், ஹீமோபிலியா நோய் பாதிப்பு குறித்தும், நோய் தீர்க்கும் சேவையில் சங்கத்தின் செயல்பாடு குறித்தும் சிறப்புரையாற்றினர்.விழாவில்,ஹீமோபிலியா சங்க தலைவர் டாக்டர் நளினி பேசுகையில், ஹீமோபிலியா எனும் மரபணு சார்ந்த ரத்த கசிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, புதுச்சேரியில் கடந்த 25 ஆண்டாக சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தின் மூலம், நோய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்யப்பட்டு வருகிறது.மனிதாபிமானமுள்ள கொடையாளர்கள் பலரின் ஒத்துழைப்பால், ஹீமோபிலியா சங்கம் தொய்வின்றி 25 ஆண்டுகளாக சிறப்பான சேவை புரிந்து வருகிறது. அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அரசு சுகாதாரத்துறை மற்றும் ஜிப்மர் நிர்வாகம் எங்களுக்கு உதவிகளை அளித்து வருகிறது. இந்த ஒத்துழைப்பு இருப்பதால் எங்களால் சிறப்பாக சேவை செய்ய முடிகிறது. எனவே, ஜிப்மர் நிர்வகத்தினர் மற்றும் அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.விழாவின் ஒரு அங்கமாக, உலக ஹீமோபிலியா தினம், ஹீமோபிலியா கூட்டமைப்பின் தென் பிராந்திய பிரதிநிதிகள் கூட்டம், பிரேம் ரூப் ஆல்வா தலைமையில் நடந்தது.விழாவின்போது, ஹீமோபிலியா சங்க தலைவி டாக்டர் நளினியின் 75 வது பிறந்த நாள் விழா, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. துணை சபாநாயகர் உள்ளிட்ட விழாவில் பங்கேற்றவர்கள், பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொடுத்தும் டாக்டர் நளிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.விழாவில், ஏ.வி.எம். திரைக்குடும்பத்தை சேர்ந்த அபர்ணா குஹன் ஷ்யாம் மற்றும் இசைக் கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை சங்க தலைவர் வீரமணி, செயலர் பென்னோராயன், பொருளாளர் ஜெயபால், செய்திருந்தனர்.அன்னை தெரேசாவாக பார்க்கிறோம்ஹீமோபிலியா சங்க வெள்ளி விழாவில் பேசிய துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, தேசிய சுகாதார சங்க இயக்குனர் மோகன்குமார் உள்ளிட்ட பலரும் பேசுகையில், குழந்தைகளை ஹீமோபிலியா நோயில் இருந்து காப்பாற்றி வாழ வைக்க, தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர் நளினி. அவரை நாங்கள் அன்னை தெரேசாவாக பார்க்கிறோம். மக்களை இந்த நோயில் இருந்து காப்பாற்ற உங்களால்தான் முடியும் என, கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட துாதர் என, பாராட்டினர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X