ஓடும் ரயிலில் ஏற 'குவார்ட்டர்' பந்தயம்: தவறி விழுந்து பலியாகும் பரிதாபம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
07:33

சேலம்: சேலம் - விருதாச்சலம் ரயில்வே தண்டவாளம், மது அருந்துமிடமாக மாறியுள்ளது. அங்கு, ஓடும் ரயிலில் ஏற, குவார்ட்டரை பந்தயமாக கட்டும் 'குடி'மகன்கள், தவறி விழுந்து உயிரிழப்பது தொடர்கிறது. இதை தடுகக, ரயில்வே போலீசார், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


சேலம், ஜங்ஷனில் தொடங்கி, அயோத்தியாப்பட்டணம் ரயில்வே ஸ்டேஷன் வரை, 14 கி.மீ.,க்கு இடைப்பட்ட பகுதியிலுள்ள தண்டவாளத்தில், தினமும் சிலர், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பலர், அமர்ந்து மது அருந்துகின்றனர். குறிப்பாக, 20 - 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களே, அதிகளவில் மது அருந்துகின்றனர். இவர்கள், போதை தலைக்கேறும் நிலையில், சரக்கு ரயில்களில் ஏற முயற்சிக்கின்றனர். அப்போது, தவறி விழுந்தும், ரயில்களில் அடிபட்டும், தங்களின் உயிரை இழக்கின்றனர். குறிப்பாக, கூட்?ஷட் தொடங்கி, டவுன் ரயில்வே ஸ்டேஷன் வரை, சேலம் - விருதாச்சலம் பயணிகள் ரயிலில், வேகம் குறைவாக இயக்கப்படும் நிலையில் ஏறி, மூன்றாவது படிக்கட்டில் (தரையை ஒட்டியது) தொங்கியபடி பயணிப்பதாக, 'குவார்ட்டரையே' பந்தயம் கட்டி உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். கடந்த, 2018, ஜனவரி முதல், ஏப்ரல் வரை, 12 பேர், ரயில்களில் அடிபட்டு உயிரிழந்தனர். நடப்பாண்டு, அதேகால கட்டத்தில், பலி எண்ணிக்கை, 25 ஆக உயர்ந்துள்ளது.


இதுதவிர, தண்டவாளத்தில், இயற்கை உபாதையை கழிக்க சென்றவர்களில், நடப்பாண்டு, 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், எட்டு பேர், போதையில், ரயிலின் குறுக்கே பாய்ந்து, தற்கொலை செய்துகொண்டனர். 14 கி.மீ., தூர ரயில்வே தண்டவாளத்தில், பலியாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், உள்ளூர், ரயில்வே போலீசார் கண்டுகொள்வதில்லை. இதுவே, பலி எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக்கிய காரணம். அதனால், உள்ளூர், ரயில்வே போலீசார் கைகோர்த்து, தண்ட வாளத்தில் அமர்ந்து மது அருந்துவோர் மீது, உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, உயிரிழப்பை தடுக்க முடியும்.


டி.ஜி.பி., உத்தரவு அன்றோடு பறந்தது: சேலம், ஜங்ஷனில், கடந்த பிப்ரவரியில், ரயில்வே டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரயில்வே தண்டவாளத்தில் மது அருந்துவதால், ஏற்படும் உயிர் பலி குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, போலீசாருக்கும் உத்தரவிட்டார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தண்டவாளத்தில் அமர்ந்து, இளைஞர்கள் குடித்து கும்மாளமிடுவது தொடர்கிறது.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X