| வீதியில் ஓடும் தண்ணீர்: மக்கள் பார்த்து கண்ணீர் Dinamalar
வீதியில் ஓடும் தண்ணீர்: மக்கள் பார்த்து கண்ணீர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 மே
2019
07:36

ஏற்காடு: குழாய் உடைந்து, இரு மாதங்களாக தண்ணீர் வீணாவதை, மக்கள் கண்ணீர் விடாத குறையாக பார்க்கின்றனர்.


ஏற்காடு பேரூராட்சி பகுதிகளுக்கு, அங்குள்ள ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில், கிணறுகள் வெட்டி, குழாய் மூலம், தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது, கோடை காலம் என்பதால், பல்வேறு இடங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது. பலர், டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீரை, விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், ஏற்காடு போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள, சேவியர் காட்டேஜ் பகுதியில், இரு மாதங்களுக்கு முன், பிரதான குழாயிலிருந்து, ஒரே வீட்டுக்கு, இரு இணைப்புகள் வழங்கப்பட்டன. இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் புகாரளித்ததால், இரு மாதங்களுக்கு முன், அந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. ஆனால், துண்டித்த இடங்களை சீரமைக்காததால், சேவியர் காட்டேஜ் பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கும்போது, தண்ணீர் வீதியில் ஓடி, சாக்கடையில் கலக்கிறது. இதுகுறித்து, அதிகாரிகளிடம் தெரிவித்தும் பலனில்லை. கோடை காலங்களில், ஆங்காங்கே தட்டுப்பாடு உள்ள நிலையில், இப்படி தண்ணீர் வீணாக்குவதை, அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், மக்கள் கண்ணீர் விடாத குறையாக பார்த்துச் செல்கின்றனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X