496 அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணி விறுவிறு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
07:38

வீரபாண்டி: குடிசை மாற்று வாரியம் சார்பில், 496 அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சேலம், சேலத்தாம்பட்டி ஏரிப்பகுதியில், குடிசைமாற்று வாரியம் சார்பில், 10 ஆண்டுக்கு முன், 100க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். கடந்தாண்டு, வாரியம் சார்பில், 42 கோடி ரூபாய் மதிப்பில், 496 அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை, தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். இதையடுத்து, டிச., 1ல், சேலத்தாம்பட்டி ஏரி, பழைய அடுக்குமாடி குடியிருப்பு அருகே, பள்ளம் தோண்டப்பட்டது. ஏரி அருகே கட்ட, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டதால், பணி நிறுத்தப்பட்டது. பின், மக்களை சமாதானப்படுத்தி, அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஐந்து மாதங்களில், 50 சதவித பணி நிறைவடைந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள், கட்டுமானப் பணியை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
01-ஜூன்-201911:15:36 IST Report Abuse
SENTHIL NATHAN ஏரியை கபளீகரம் செய்வது பெரிய தப்பு. அதில் குடிசை மாற்று வாரியம் வீடுகளை கட்டி ஏழைகளை குடியேற்றுவது அதை விட பெரிய தப்பு. இந்த திட்டத்தை போட்ட அதிகாரிகள் அனைவரும் உருப்படாமல் போவார்களாக ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X