| வரும் 30ல் எருதாட்டம்: காளைகளை பிடிக்க பயணம் Dinamalar
வரும் 30ல் எருதாட்டம்: காளைகளை பிடிக்க பயணம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 மே
2019
07:39

வீரபாண்டி: சேலம், கொண்டலாம்பட்டி அருகே, பெரிய புத்தூர் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் பொங்கல் திருவிழா, வரும், 30ல் நடக்கவுள்ளது. அதை முன்னிட்டு, எருதாட்டம் நடத்தப்படும். அதன்படி, அன்று காலை, 10:00 முதல், 12:00 மணி வரை பொங்கல் வைபவம், மதியம், 2:00 முதல் மாலை, 5:00 மணி வரை, மாரியம்மன் கோவில் திடலில், எருதாட்டம் நடக்கவுள்ளது. இதற்காக, வருவாய்த்துறையிடம் விண்ணப்பித்து, கடந்தாண்டே அரசிதழில் எருதாட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், நேற்று முன்தினம், வட கயிறுகளுக்கு பூஜை போட்டு, இளைஞர்கள், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆத்தூர், மேட்டூர், இடைப்பாடி, தாரமங்கலம், வாழப்பாடி, சிங்கிபுரம், சின்னப்பம்பட்டி ஊர்களிலிருந்து, காளைகளை அழைத்து வர புறப்பட்டுள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X