| வறட்சியால் செயல் இழந்த சுத்திகரிப்பு நிலையம் Dinamalar
வறட்சியால் செயல் இழந்த சுத்திகரிப்பு நிலையம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 மே
2019
23:22

திருவாடானை : திருவாடானை தாலுகாவில் கடும் வறட்சியாயால் விதை சுத்திகரிப்பு நிலையம் இயங்காமல் போனது.திருவாடானை பாரதிநகரில் வேளாண்மை அலுவலகம் சார்பில் 2013 ல் 25 லட்சம் ரூபாய் செலவில் விதை சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை இங்கு கொண்டு வந்தை விதை சுத்திகரிப்பு செய்து பயன்பெற்றனர்.




கடந்த நான்கு ஆண்டுகளாக வறட்சியாகிவிட்டதால் விதை சுத்திகரிப்பு நிலையம் பூட்டப்பட்டு இயங்காமல் உள்ளது. கட்டடத்தின் முன்பு சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்துள்ளது.இது குறித்து வேளாண்மை அலுவலர்கள் கூறுகையில், திருவாடானை அருகே நெய்வயல் கிராம மக்கள் கிணற்று பாசனம் மூலம் அறுவடை செய்த நெல்லையும், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த சில விவசாயிகள் மட்டும் எப்போதாவது நெல் கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்து பயன் பெறுகிறார்கள். வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டதால் விதை சுத்திகரிப்பு நடைபெறவில்லை. இதனால் இயந்திரங்கள் துருப்பிடித்து போகாமல் இருக்க அடிக்கடி சுத்தம் செய்யப்படுகிறது,என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X