| பார்க்கிங் இடமில்லாத திருமண மகால்கள் Dinamalar
பார்க்கிங் இடமில்லாத திருமண மகால்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 மே
2019
02:42

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் பார்க்கிங் இடவசதி இல்லாமல் இருக்கும் திருமண மண்டபங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கின்றனர்.



ஸ்ரீவில்லிபுத்துாரில் பல்வேறு தெருக்களிலும், நகராட்சி மற்றும் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் திருமண மண்டபங்கள் பல உள்ளன. இத்திருமண மண்டபங்கள் போதிய பார்க்கிங் இடமில்லாததால் திருமணத்திற்கு வருபவர்களின் டுவீலர்கள், ஆட்டோக்கள், கார்கள் ரோட்டிலே நிறுத்தப்படுகிறது. இதனால் கடும்போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் பாதிக்கின்றனர்.குறிப்பாக தெருக்களில் தாறுமாறாக நிறுத்தபடும் வாகனங்களால் அப்பகுதி மக்கள் நடந்து செல்வதற்கே சிரமப்படுகின்றனர். அதுபோல் முக்கிய ரோடுகளிலும் அதிகளவில் நிறுத்தபடும் வாகனங்களால் பஸ் போக்குவரத்து செல்வதில் கூட காலதாமதம் ஏற்படுகிறது. விபத்து காலங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறை வாகனங்கள் எளிதில் செல்லமுடியாதநிலை காணப்படுகிறது.இனிவரும் காலங்களில் போதிய பார்க்கிங் இடவசதி இருந்தால் மட்டுமே,திருமண மண்டபங்கள் கட்ட உள்ளாட்சி அமைப்புகள் அனுமதிக்கவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X