நடவடிக்கை! வைகையை தூய்மையாக்க மாநகராட்சி; தினமலர் செய்தி எதிரொலியாக உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2019
05:11

மதுரை : மதுரையில் கழிவுநீர் கலப்பு, கொட்டப்படும் குப்பையால் மாசடைந்துள்ள வைகையை தினமலர் செய்தி எதிரொலியாக துாய்மையாக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது.



நகரில் பெத்தானியாபுரம் முதல் வண்டியூர் வரை வைகை இரு புறமும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் விடப்படுகிறது. மேலும் ஆங்காங்கு வைகையில் குப்பைகள், கட்டட கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் வைகை மாசுபட்டுள்ளது. வைகையின் அவல நிலை குறித்து தினமலர் நாளிதழில் மே 22 'எங்கே எங்கள் வைகை' என்ற தலைப்பில் முழுப்பக்க கட்டுரை வெளியானது.



அதன் எதிரொலியாக மாநகராட்சி கமிஷனர் விசாகன் வைகையை துாய்மைப்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆறு மற்றும் கரையோரங்களில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றவும் அவர் உத்தரவிட்டார். பெத்தானியாபுரம் காமராஜர் பாலம் முதல் குருவிக்காரன் சாலை வரை 7 கி.மீ., துாரம் வைகையின் இருக்கரைகளிலும் நேற்று மாநகராட்சி ஊழியர்கள் துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் 800 துப்புரவு ஊழியர்கள் பல குழுக்களாக பிரிந்து இதில் ஈடுபட்டனர். அவர்கள் கரைகளில் குவிந்து கிடந்த குப்பை, ஆற்றுக்குள் வீசப்பட்ட குப்பையை அகற்றினர். எட்டு மணல் அள்ளும் இயந்திரங்கள், 16 டிராக்டர்கள், 20 பேட்டரி வாகனங்கள் இதில் பயன்படுத்தப்பட்டன.



இப்பணியை துப்புரவு, சுகாதார ஆய்வாளர்கள் 45 பேர் மேற்பார்வையிட்டனர். துாய்மை பரப்புரையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கரையோர மக்களிடம் துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மக்கும், மக்காத குப்பைகளை கொட்ட 2 ஆயிரம் வீடுகளுக்கு தொட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டன.



இப்பணியை ஆய்வு செய்த கமிஷனர் விசாகன் கூறியதாவது: வைகையை துாய்மையாக்க முழு முனைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநகராட்சி நடவடிக்கைக்கு கரையோர மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். ஆற்றுக்குள் குப்பையை கொட்டக்கூடாது. 40 டன் குப்பை நேற்று ஒரே நாளில் வைகையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் திட்டம் உள்ளது என்றார்.



துணை கமிஷனர் குமரேஷ்வரன், நகர் நல அலுவலர் சரோஜா, நகரமைப்பு அலுவலர் ரங்கநாதன், உதவி கமிஷனர்கள் முருகேசபாண்டியன், பழனிச்சாமி, நர்மதாதேவி, பிரேம்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan k - madurai,இந்தியா
29-மே-201911:34:43 IST Report Abuse
kumaresan k துரை நகரின் குடியிருப்பு மற்றும் சுற்றுலா மையங்களுக்கு அருகில் உள்ள லாரி ஆபீசு குடவுன்களை நகரின் வெளியே அல்லது பை-பாஸ் ரோட்டோரம் பெரிய இடத்தில கழிப்பறை வசதிகளுடன் அமைத்து அதற்க்கு வாடகை வசூல் செய்வதும் பராமரிப்பதும் , அங்கிருந்து சிறிய ரக வேன்கள் மூலம் நகரின் தேவைகளை பூர்த்தி செய்வதும் மாநகராட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று .
Rate this:
Share this comment
Cancel
kumaresan k - madurai,இந்தியா
29-மே-201911:26:25 IST Report Abuse
kumaresan k மதுரை நகரின் குடியிருப்பு மற்றும் சுற்றுலா மையங்களுக்கு அருகில் உள்ள லாரி ஆபீசு குடவுன்களை நகரின் வெளியே அல்லது பை-பாஸ் ரோட்டோரம் பெரிய இடத்தில கழிப்பறை வசதிகளுடன் அமைத்து அதற்க்கு வாடகை வசூல் செய்வதும் பராமரிப்பதும், அங்கிருந்து சிறிய ரக வேன்கள் மூலம் நகரின் தேவைகளை பூர்த்தி செய்வதும் மாநகராட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று .
Rate this:
Share this comment
Cancel
kumaresan k - madurai,இந்தியா
29-மே-201911:01:28 IST Report Abuse
kumaresan k வைகை நதி மட்டும் சுத்தம் செய்தல் போதாது . மதுரையில் உள்ள அணைத்து நகர் புறங்களை சுத்தம் செய்வது அவசியம் . மதுரை திருமலை மஹால் ஒரு அருமையான சுற்றுலா மையம் . பதினைந்து -இருபது வருடங்களுக்கு முன் , மதுரை வரும் வெளிநாட்டு பயணிகள் திருமலை நாயக்கர் மஹாலை சுற்றி பார்த்து மகிழ்வார்கள் . இன்று அந்த பக்கமாக கூட செல்ல முடியாத அளவுக்கு லாரி மற்றும் கனரக வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளன . இந்த அருமையான திருமலை மஹாலை சுற்றி லாரி ஆபீசுகள் குடவுன்கள் . இரவு முழுவதும் லாரி ஒலிபான்களின் இரைச்சல் . ஒரு நல்ல அமைதியான குடியிருப்பு பகுதியாகவும் திகழ்ந்த மஹாலுக்கு அருகில் உள்ள பந்தாடி முதல் தெரு லாரி குடோவ்ன் மற்றும் சிறுநீர் கழிப்பிடமாக மாற்றி உள்ளனர் . மிகுந்த தொல்லைகளுக்கு ஆளாகிய குடியிருப்பு மக்கள் அந்த பகுதியை விட்டு அநியாயமாக விரட்டியடிக்க பட்டியிருக்கிறார்கள் . குடியிருப்பு பகுதியில் லாரி குடௌன்களுக்கு அனுமதி தந்த மதுரை மாநகராட்சியின் கொடுரமான எண்ணத்தை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் . இந்த மாதிரி கொடூர எண்ணம் எந்த ஒரு மாநகராட்சிக்கும் வந்ததில்லை . வைகை நதியை போன்றே மஹால் பந்தாடி குடியிருப்பு பகுதியையும் மதுரை மாநகராட்சி நாசமாக்கியுள்ளது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X