வருமானம் பார்க்கும் மாநகராட்சி வசதி தரலையே
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2019
06:49

திண்டுக்கல்:திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் குறைந்த அளவு அடிப்படை வசதி கூட இல்லாத நிலையில் வியாபாரிகளும் பொதுமக்களும் பல்வேறு இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ளது காந்திமார்க்கெட். நாற்பது ஆண்டுகளை கடந்த இங்கு, 'ஏ' மற்றும் 'ஏ1' பகுதியில் கமிஷன் கடைகளும், 'பி' பகுதி மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகளும், 'சி' பகுதி சில்லரை விற்பனை என 500க்கும் மேற்பட்ட கடைகளுடனும் உள்ளது. வத்தலகுண்டு, நிலக்கோட்டை, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழநி, சாணார்பட்டி, நத்தம் என மாவட்டத்தின் அனைத்து பகுதி விளைபொருட்களும் இங்கு வருகின்றன. காலை 5:30 மணிக்கு துவங்கும் மார்க்கெட் இரவு 9:00 மணி வரை செயல்படுகிறது. தினமும் வியாபாரிகள், பொதுமக்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் வருகின்றனர்.

நிரந்தர கடைகள் மாத வாடகை அடிப்படையில் செயல்படுகின்றன. திறந்த வெளி கடைகள் மூடை கணக்கில் ஒப்பந்ததாரருக்கு பணம் செலுத்துகின்றனர். டிராக்டர், லாரி, மினி லாரி மற்றும் இதர நான்கு சக்கர வாகனங்கள் நுழைவு கட்டணம் ரூ.40 ஆகவும், தலைச்சுமை, டூவீலர், மூன்று சக்கர வாகனம், டிராக்டர், லாரி மற்றும் இதர வாகனங்கள் மூலம் மூடைக்கு நுழைவு கட்டணமாக ரூ.5-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டு ரூ.80 லட்சம் வருமானம் வருகிறது. ஆனால், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. 'ஏ, பி' பிரிவு மார்க்கெட் பகுதியில் கமிஷன் கடைகளை தவிர்த்து சில்லரை விற்பனையில் ஈடுபடுவோர் மேற்கூரை வசதியின்றி மழை, வெயிலில் அவதிப்படுகின்றனர்.

மழை நீர் செல்ல கால்வாய் வசதி முறையாக அமைக்கப்படாததால், சிறு மழைக்கே சகதிக்காடாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் நிறுத்த 'பார்க்கிங்' வசதியில்லை. கடைகளின் முன்பும், வழியோரங்களிலும் நிறுத்துவதால் மார்க்கெட் வளாகம்

அடிக்கடி நெருக்கடியில் சிக்குகிறது.

'சி' பிரிவு பகுதி பள்ளமாக இருப்பதால் மழைநீர், கழிவு நீர் தேங்கும் இடமாக மாறி வருகிறது. 220 கடைகள் இருந்த இடத்தில் தற்போது 80 கடைகளே செயல்படுகின்றன. மேற்கூரை ஒழுகுவதால் சாக்கு மற்றும் கூரைகள் கொண்டு உரிமையாளர்களே அவற்றை தற்காலிகமாக சரி செய்துள்ளனர்.

300-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தும் ஒரு கழிப்பறை கூட இல்லை. மார்கெட் வளாகமே பல நேரங்களில் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி விடுகிறது. துாய்மை

இந்தியா குறித்த விழிப்புணர்வில் ஈடுபடும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் அதற்கான முயற்சி எடுக்கவில்லை. வெளிப்புற பகுதியில் கொட்டப்படும் கழிவுகள் அப்புறப்படுத்தாமல் தேங்கி கிடந்து துர்நாற்றம் வீசுகிறது.


மழை நேரத்தில் வியாபாரம் பாதிப்பு


திண்டுக்கல் காந்தி மார்க்கெட் மூலம் மாநகராட்சிக்கு மாதம் ரூ.8 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. இதை நம்பி 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். வாடகை வசூல் செய்வதிலும், ஒப்பந்தத்தை அதிக தொகைக்கு விடுவதிலும் அக்கறை காட்டும் மாநகராட்சி நிர்வாகம் இங்கு எந்த வித அடிப்படை வசதியையும் செய்ய முன்வருவதில்லை. மாநிலத்திலேயே மோசமான மார்க்கெட்டாக திண்டுக்கல் உள்ளது. மழை நேரங்களில் வாடிக்கையாளர் வருகை குறைவதால், வியாபாரம் கணிசமாக பாதிக்கப்படுகிறது.


கழிப்பறை வசதி கிடையாது.


கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக இங்கு கடை வைத்துள்ளோம். ரோடு மட்டத்தில் இருந்து பள்ளத்தில் கடைகள் உள்ளதால் மழை நீர் தேங்கி கழிவுகளின் சங்கமமாக உள்ளது. இதை உயர்த்தி தர வேண்டும். வாடிக்கையாளர்கள் காய்கறிகள் வாங்க வருவதில்லை. அன்றாட பொழப்புக்கே அல்லாட வேண்டியுள்ளது. அவசரத்துக்கு ஒதுங்க கழிப்பறை வசதி கிடையாது. அதிகாரிகள் இதை கண்டு கொள்வதும் கிடையாது. டூவீலர்களை கண்ட இடங்களில் நிறுத்துவதால் நெருக்கடி ஏற்படுகிறது. மாடுகளின் தொல்லையாலும் அவதிப்படுகிறோம். மாநகராட்சி நிர்வாகம் எங்களை கவனிக்க வேண்டும்.

அமிர்தா, வியாபாரி


 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manikandan Sivalingam - delhi,இந்தியா
06-ஜூன்-201911:00:17 IST Report Abuse
Manikandan Sivalingam இதற்கு ஒரே தீர்வு தான்... அரசாங்கத்திடம் இருந்து மாதம் லட்சக்கணக்கில் ஊதியம் வாங்கி கொண்டு மற்றும் உழைப்பாளர்களிடம் இருந்து பணத்தை பெற்று கொண்டு மாநகராட்சி அதிகாரிகள்.. இவர்கள் மக்களுக்கு கடமை ஆற்ற வேண்டும் என்றால்.. நம்முடைய சிந்தனையும்-செயலும் மாற வேண்டும்.. அரசாங்க ஊழியர்களை அடிக்க கூடாது என சட்டம் சொல்கிறது..... ஆனால் அதே சட்டம் கள்ளகாதல் மற்றும் கள்ள உறவு தவறில்லை....நாம் இந்த காலத்தில் செய்ய வேண்டிய ஒரே செயல் இதுவே.. கலியுகத்தில் இராமனுக்கு வேலை இல்லை...இராவணணுக்குத்தான் வேலை......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X