| நடவடிக்கை!மதுரை வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க...ரூ.5 கோடியில் சுத்திகரிப்பு மையங்கள் அமைப்பு Dinamalar
நடவடிக்கை!மதுரை வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க...ரூ.5 கோடியில் சுத்திகரிப்பு மையங்கள் அமைப்பு
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

07 ஜூன்
2019
05:24
பதிவு செய்த நாள்
ஜூன் 07,2019 02:13

மதுரை:மதுரை வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஐந்து கோடி ரூபாயில் இரு இடங்களில் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.


மதுரை நகரில் 10 கி.மீ., துாரத்தை கடக்கும் வைகை நதி குப்பை கழிவுகளாலும், கழிவுநீராலும் மாசடைகிறது. ஆற்றின் வடபகுதியில் இருந்து கழிவுநீர் தாராளமாக கலக்கிறது. குறிப்பாக பெத்தானியாபுரம் பாலத்தின் கீழ் பகுதி, கீழவைத்தியநாதபுரம், பந்தல்குடி கால்வாய், குருவிக்காரன் சாலை, வண்டியூர் கால்வாயில் இருந்து தினமும் பல லட்சம் லிட்டர் கழிவுநீர் ஆற்றில் சேருகிறது. பாதாள சாக்கடை இருந்தும் ஆற்றுக்குள் கழிவுநீர் திருப்பி விடப்படுகிறது.கழிவுநீர் கலப்பதை தடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதன் எதிரொலியாக கழிவுநீர் கால்வாய்கள் ஆற்றில் சந்திக்கும் பகுதியில் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


கமிஷனர் விசாகன் கூறியதாவது: வைகையின் துாய்மை பேண தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்கிறோம். குப்பை கொட்டுவதை பெருமளவு தடுத்துவிட்டோம். கழிவுநீர் கலப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்க பந்தல்குடி மற்றும் வண்டியூர் கால்வாய்கள் ஆற்றில் சேரும் இடங்களில் சுத்திகரிப்பு மையம் அமைக்க உள்ளோம். இக்கால்வாய்களில் இருந்து தான் அதிகளவு கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது.இதற்காக தலா 2.5 கோடி வீதம் 5 கோடி ரூபாயில் திட்டம் தயாரித்துள்ளோம். விரைவில் பணிகளை துவக்கி விடுவோம். சுத்திகரிக்கும் தண்ணீரை நகர் பகுதி பூங்காக்களை பராமரிக்க பயன்படுத்துவோம். பிற இடங்களில் இருந்து குறைந்த அளவில் கழிவுநீர் கலக்கிறது. அவற்றுக்கும் மாற்று ஏற்பாடு செய்ய உள்ளோம், என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X