ஒரே டூவீலரில் சென்ற நால்வர் டாரஸ் லாரி மோதி பரிதாப பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2019
07:44

அரியலூர்: அரியலூர் அருகே, ஒரே டூவீலரில் சென்ற நால்வர், டாரஸ் லாரி மோதி, பரிதாபமாக உயிரிழந்தனர்.


அரியலூர், வெளிப்பிரிங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 19; டிப்ளமோ முடித்துள்ளார். இவருக்கு, 19 20 வயதில், மூன்று நண்பர்கள் இருந்தனர். நால்வரும், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், ஒரே டி.வி.எஸ்., எக்செல் டூவீலரில், வி.கைகாட்டி கிராமத்தில் இருந்து, ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். 'ஹெல்மெட்' அணியவில்லை. திருச்சி சிதம்பரம் சாலையில், மயிலாண்டகொட்டாய் என்ற இடமருகே, வி.கைகாட்டியில் இருந்து எதிரே வந்த ஹோண்டா பைக் மீது, நால்வர் சென்ற டூவீலர் நேருக்கு நேர் மோதியது. இதில், இரண்டு டூவீலர்களில் வந்தவர்களும், நிலை தடுமாறி விழுந்தனர். சாலையின் நடுவில் விழுந்த விக்னேஷ் உள்ளிட்ட நண்பர்கள் நால்வர் மீதும், பின்னால் வந்த சுண்ணாம்பு கல் லோடு ஏற்றிய டாரஸ் லாரி ஏறியது. இதில், நால்வரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஹோண்டா டூவீலரில் வந்த, 28 34 வயதுடைய இருவர், படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களின் உறவினர்கள், லாரி டிரைவரை கைது செய்யக் கோரி, திருச்சி சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தி, மறியலை கைவிட செய்தனர். இதனால், திருச்சி சிதம்பரம் சாலையில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டாரஸ் லாரி டிரைவரான, கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி, 39, என்பவரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Rahman - Madurai,இந்தியா
15-ஜூன்-201919:01:27 IST Report Abuse
Abdul Rahman இதில் லாரி டிரைவர் மேலே எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை. 4 பேர் பைக்கில் போனது, ஹெல்மட் போடாதது தவறு. ட்ரிவிங் லைசென்ஸ் இருந்தா?
Rate this:
Share this comment
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
14-ஜூன்-201912:25:14 IST Report Abuse
கல்யாணராமன் சு. லாரி டிரைவரை கைது விசாரிக்கிறதிலே பிரச்சினை ஒண்ணும் இல்லை .....ஆனா அதே சமயத்திலே ஒரு ஸ்கூட்டியிலே எப்படி நாலு பேர் போனாங்கன்னும் விசாரியுங்க.. ... அதுதான் நியாயம் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X