| துப்பு துலக்கிய மோப்ப நாயை கடித்து குதறிய வளர்ப்பு நாய் Dinamalar
துப்பு துலக்கிய மோப்ப நாயை கடித்து குதறிய வளர்ப்பு நாய்
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2019
07:15

தஞ்சாவூர்: தஞ்சையில், ஓய்வு பெற்ற மின் வாரிய பொறியாளர் வீட்டில் நடந்த திருட்டை கண்டுபிடிக்க சென்ற போலீஸ் மோப்ப நாயை, வளர்ப்பு நாய் கடித்துக் குதறியது.


தஞ்சாவூர், முனிசிபல் காலனியில் வசிப்பவர், கண்ணன், 59; மின் வாரியத்தில், பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டின் பின்புற கதவை உடைத்து, மர்ம நபர்கள், 25 சவரன் நகைகளையும், 1.5 கிலோ வெள்ளி பொருட்களையும் திருடிச் சென்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற, டி.எஸ்.பி., கலைகண்ணகி, கைரேகை நிபுணர்கள், தடயவியல் துறை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் ஆகியோர், தடயங்களை ஆய்வு செய்தனர்.போலீஸ் மோப்ப நாய், ராஜராஜன் வரவழைக்கப்பட்டது. தடயங்களை மோப்பம் பிடித்த நாய், ஐந்தாவது தெருவில் ஓடிய போது, அப்பகுதியில் உள்ள வீட்டில் இருந்து வெளியே வந்த வளர்ப்பு நாய் ஒன்று, போலீஸ் மோப்ப நாயை கடித்து குதறியது. இதில், கால், கழுத்து போன்ற இடங்களில் காயமடைந்த மோப்ப நாயை, அதன் பயிற்சியாளர் மீட்டு, போலீஸ் வாகனத்தில், கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்தார். இதனால், திருட்டில் துப்பு துலக்கும் பணி, அரைகுறையாக நின்று போனது.


 

Advertisement
மேலும் தஞ்சாவூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X