| டிரைவர் வெட்டிக் கொலை Dinamalar
டிரைவர் வெட்டிக் கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2019
07:16

மயிலாடுதுறை: நாகை மாவட்டத்தில், டிரைவரை கொன்ற இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்


நாகை மாவட்டம், கொள்ளிடம், பரவங்காட்டை சேர்ந்தவர் நடராஜமணி, 40; சென்னையில் டிரைவராக பணியாற்றியவர், விடுப்பில் ஊருக்கு வந்திருந்தார்.நேற்று முன்தினம் இரவு, நடராஜமணியின் தாய் தனத்திடம், அதே பகுதியை சேர்ந்த ரவுடி கார்த்திக், 36, குடிபோதையில் தகராறு செய்தான். அவன் பிடித்து தள்ளியதில் காயமடைந்த தனம், சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார்.தாயை தாக்கியது குறித்து, நேற்று காலை, கார்த்திக்கிடம் நடராஜமணி கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த கார்த்திக், அவனது நண்பர் சத்யா, 35, ஆகிய இருவரும், நடராஜமணியை அரிவாளால் வெட்டி தப்பினர். நடராஜமணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொள்ளிடம் போலீசார், கார்த்திக், சத்யாவை கைது செய்தனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X