| பரமக்குடி தெருக்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு Dinamalar
பரமக்குடி தெருக்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:02

பரமக்குடி:பரமக்குடி தெருக்களின் இருபுறமும் கடை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்களின் வாகனங்கள் அணிவகுப்பதால் நாள் முழுவதும் வாகன நெரிசல் எரிச்சலடையச்செய்கிறது.


போக்குவரத்து போலீசார் பஜார் பகுதியில் ரோந்து செல்லாமல்உள்ளதால் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரிக்கிறது.பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ள நிலையில், சில குறிப்பிட்ட தெருக்களில்தெரு வியாபாரம், வாகனங்களை நிறுத்தி வைப்பதால் நாள் முழுவதும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.



இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் செல்வோர்பெரியகடை பஜார், கீழப்பள்ளி வாசல் தெருவை அதிகம் பயன்படுத்துவதால் ஆர்ச் தொடங்கி காந்திசிலை வழியாக பெரிய பஜார், காந்திஜி ரோடு,ஆற்றுப்பாலம் வரை மற்றும் பஸ் ஸ்டாண்ட் தொடங்கி, கீழப்பள்ளி வாசல் தெருமிகுந்த நெரிசலுக்குள்ளாகியுள்ளது.இத்தெருக்களில் கடை உரிமையாளர், பணியாளர்கள் என டூவிலர்களை கடைமுன் நிறுத்தி வைக்கின்றனர்.



தொடர்ந்து வாடிக்கையாளர்களின் டூவீலர்கள் மற்றும்இருபுறங்களிலும் சரக்குகளையும் பார்வையில் படும்படி தெருக்களில்வைக்கின்றனர். இதனால் 10, 20 அடி வரை தெருக்கள் 5, 10 அடி என சுருங்கிஇருக்கின்றது.இதற்கு மத்தியில் கடைகாரர்களின் படிக்கட்டுகள் தெருக்களை ஆக்கிரமித்துகட்டியுள்ளனர். ஆகவே நாள் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகள் சைக்கிள், ஆட்டோ, வேன்கள் மற்றும் சரக்கு ஏற்ற, இறக்க வரும் வாகனங்கள் எனஎரிச்சலுாட்டும் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.


இந்நிலையில் போக்குவரத்து போலீசார் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கியஇடங்களில் நிற்பதோடு சரி. பஜார் பகுதிகளில் ரோந்து வராமல் உள்ளதால்,நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது. ஆகவே போர்க்காலஅடிப்படையில், நகராட்சி மூலம் ஆக்கிரமிப்பு களை முறைப்படுத்துவதுடன்,தெருக்களில் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீசார் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X