| காஸ் சிலிண்டரை திரும்ப ஒப்படைங்க! Dinamalar
காஸ் சிலிண்டரை திரும்ப ஒப்படைங்க!
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:03

வாலாஜாபாத் : 'பொதுமக்கள் உபயோகப்படுத்தும் காஸ் சிலிண்டரை, ஏஜன்சியிடம், திரும்ப ஒப்படைக்க வேண்டும்' என, ஏஜன்சி நிறுவனம் கேட்பதால், நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு,'உஜ்வாலா' திட்டத்தின் கீழ், மத்திய அரசு சார்பில், இலவச காஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சிலிண்டர் பெற்ற நுகர்வோர், ஓராண்டிற்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் காஸ் ஏஜன்சி நிறுவனம் ஒன்று, அந்நிறுவன நுகர்வோரின் மொபைல் போன்களை தொடர்பு கொண்டு, 'நீங்கள் உபயோகப்படுத்தும் காஸ் சிலிண்டரை, ஏஜன்சியிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்' எனக் கேட்கிறது.



கடந்த வாரம், வாலாஜாபாத் அடுத்த, புரிசை கிராமத்தைச் சேர்ந்த, ஐந்து நுகர்வோர்களிடம், சிலிண்டரை ஒப்படைக்க சொல்லி கேட்டது, காஸ் சிலிண்டர் உபயோகிக்கும் நுகர்வோர் இடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் காஸ் ஏஜன்சி நிறுவன ஊழியர் ஒருவர் கூறியதாவது:காஞ்சியில், 18 வயதிற்கு குறைவாக இருப்போருக்கு, காஸ் இணைப்பு கொடுத்திருந்தால், அந்த சிலிண்டரை மீண்டும்பெறும்படி, எங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.



நாங்கள் மட்டுமல்ல, அனைத்து காஸ் ஏஜன்சிகளுக்கும் கூறப்பட்டுள்ளது.அதன்படி, 18 வயதிற்கு குறைவாக காஸ் இணைப்பு கொடுத்திருப்போரிடம், சிலிண்டரை பெற்று வருகிறோம்; வேறு ஒன்றுமில்லை.இவ்வாறு, அவர்கூறினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X