திருவாடானையில் பலத்த சூறாவளிக்காற்று
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:04

திருவாடானை:திருவாடானை அருகே பலத்த சூறாவளிக் காற்றில் மின்கம்பம் முறிந்து விழுந்ததால் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில்மின்சப்ளை துண்டிக்கப்பட்டது.



ஆண்டிவயல் கிராமத்தில் வயல்காட்டில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் ஆண்டிவயல், ஆதியூர், அரும்பூர், நம்புதாளை, முகிழ்த்தகம், சோலியக்குடி உட்பட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சப்ளை துண்டிக்கபட்டதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.



இது குறித்து ஆண்டிவயலை சேர்ந்த முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் நாகநாதன் கூறுகையில், பல மாதங்களாகவே வயல்காட்டு வழியாக செல்லும் பல மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்து முறிந்து விழும் நிலையில் இருந்தன. இதனால் விவசாயிகள் மின்கம்பங்கள் இருக்கும் இடங்களில் விவசாய பணிகளில் ஈடுபடும் போது அச்சமடைந்தனர்.அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.



முறிந்த மின்கம்பம் இருக்கும் இடம் கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியாகும். இரவு நேரத்தில் விழுந்ததால்பாதிப்பு இல்லை. நேற்று மாலை வரை சரி செய்யாததால் மின்சாரம் இல்லாமல்கிராம மக்கள் அவதிப்படுகின்றனர் என்றார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு அஞ்சுகோட்டை கிராம வயல்காட்டில் மின்கம்பம் முறிந்து விழுந்ததில் மேய்ச்சலுக்காக சென்ற ஆறு பசு மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்தன. திருவாடானை, தொண்டி பகுதியில் 300 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள்அபாய கட்டத்தில் இருப்பதால் உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X