| அமைச்சர் மணிகண்டன்--கருணாஸ் மோதல்மாணவர்களுக்கு லேப்டாப் கிடைக்குமா Dinamalar
அமைச்சர் மணிகண்டன்--கருணாஸ் மோதல்மாணவர்களுக்கு லேப்டாப் கிடைக்குமா
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:07

திருவாடானை:அமைச்சர் மணிகண்டன்- கருணாஸ் மோதல் நீடிப்பதால் மாணவர்களுக்கு லேப்டாப் கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது.


திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் ஜூன் 8 ல் 1033 மாணவர்களுக்கு அமைச்சர் மணிகண்டன் தலைமையில்லேப்டாப் வழங்கும் விழா அறிவிக்கப்பட்டது. அமைச்சர் வராததால் விழா ரத்து செய்யபட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனால் ஆவலுடன் காத்திருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.



தனது தொகுதியில் தன்னை புறக்கணித்துவிட்டு அரசு விழாக்கள் நடப்பதாக கருணாஸ் எம்.எல்.ஏ., முதல்வரிடம் புகார் தெரிவித்ததால் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்ய பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் அமைச்சர் மணிகண்டன் பேட்டியில், கருணாஸ் என்ற எம்.எல்.ஏ.வை எனக்கு தெரியாது என்று கூறியதால் இருவருக்கும் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.



இதனால் மாணவர்களுக்குலேப்டாப் கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், விழா ரத்து செய்யப்பட்ட பின் நேற்று வரை லேப்டாப் வழங்குவது குறித்து எந்த தகவலும் அதிகாரிகளிடம் இருந்து வரவில்லை. கடந்தாண்டு மங்களக்குடியில் லேப்டாப் திருட்டு போனதால் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட லேப்டாப்புகளை பாதுகாப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் 24 மணி நேரமும்போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், என்றனர்.



பெற்றோர் கூறுகையில், அமைச்சருக்கும் கருணாசுக்கும் ஏற்பட்டுள்ள மோதலால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.விரைவில் லேப்டாப்புகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X