ஜாதி சான்றை கேட்கும் படப்பை பள்ளி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:08

படப்பை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஜாதி சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே, சேர்க்கை நடைபெறும் என, பள்ளி நிர்வாகம் கூறுவதால், பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் உள்ளது, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த, நுாற்றுக்கணக்கான மாணவியர், 6 முதல், பிளஸ் 2 வரை படிக்கின்றனர்.கிராமப்புறங்கள் நிறைந்த பகுதி என்பதால், இப்பள்ளியில் படிக்கவே, மாணவியரை, பெற்றோர் சேர்க்கின்றனர்.



இந்நிலையில், 6 மற்றும் 9வது வகுப்புகளில் சேர்க்கும் மாணவியருக்கு, ஜாதி சான்றிதழ் இருந்தால் மட்டுமே சேர்க்கை நடைபெறும் என, பள்ளி நிர்வாகம் கூறி வருவதாக, புகார் எழுகிறது.ஜாதி சான்றிதழை விண்ணப்பித்து வாங்கி தருவதாக பெற்றோர் தெரிவித்தும், மாணவியரை பள்ளியில் சேர்க்க அனுமதிப்பதில்லை எனவும், கூறப்படுகிறதுதற்போதைய சூழலில், ஜாதி சான்றிதழ் பெற, 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருப்பதாகவும், அதுவரை தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க முடியுமா எனவும், பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.



மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தலையிட்டு, சேர்க்கைக்கு பின் ஜாதி சான்றிதழ் கேட்க, பள்ளி தலைமையிடம் அறிவுறுத்த வேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது.பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு மட்டும் ஜாதி சான்றிதழை கட்டாயம் கேட்டு வருகிறோம். அவர்களுக்கு உதவித்தொகை கொடுக்க அந்த சான்றிதழ் தேவைப்படுகிறது. பள்ளியில் சேர்த்த பின், ஜாதி சான்றிதழை கொடுக்க, பெற்றோர் அலட்சியமாக இருக்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X