| காஞ்சிபுரத்தில் சாலை சீரமைப்பு பணி தீவிரம் Dinamalar
காஞ்சிபுரத்தில் சாலை சீரமைப்பு பணி தீவிரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:10

காஞ்சிபுரம் : அத்தி வரதர் வைபவத்தையொட்டி, வெளியூர் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்வதற்காக, காஞ்சிபுரத்தில், சாலை சீரமைப்பு பணி தீவிரமாக நடக்கிறது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கோவில் குளத்தில் இருந்து, அத்திவரதர் எழுந்தருளும் வைபவம், ஜூலை, 1ல் துவங்குகிறது.



இவ்விழாவுக்கு வரும், பக்தர்கள் வசதிக்காக, மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் பல பணிகளை மேற்கொண்டுள்ளது.வெளியூர் வாகனங்கள், 'பார்க்கிங்' செய்வதற்கான இடத்தை தயார்படுத்தும் பணி நடக்கிறது.இந்நிலையில், வெளியூர் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் செல்வதற்கு வசதியாக, சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.முதற்கட்டமாக வேளிங்கபட்டரை பகுதியில், சாலையோரம் குவிந்து கிடக்கும் மண் குவியல் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கும் பணி நடக்கிறது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X