| சான்றிதழ் சரிபார்ப்பு ஆய்வு Dinamalar
சான்றிதழ் சரிபார்ப்பு ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:11

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில், இன்ஜினியரிங் கவுன்சிலில் மையத்தில் நடைபெறும், மாணவ - மாணவியரின், அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, காஞ்சிபுரம் கலெக்டர் ஆய்வு செய்தார்.காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது.இன்ஜினியரிங் படிப்புக்கு, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்தவர்களுக்கு, மாணவ - மாணவியரின் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு, 7ல் துவங்கியது.இந்த மையத்தில், மொத்தம், 1,900 மாணவ - மாணவியரின் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.



நேற்று நடந்த சான்றிதழ் சரிபார்க்கும் பணியை, காஞ்சிபுரம் கலெக்டர், பொன்னையா ஆய்வு செய்தார்.இதுவரை சரிபார்ப்பு செய்த மாணவ - மாணவியரின் எண்ணிக்கை, அதற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X