இந்தியாவில் 40.20 லட்சம் எக்டேரில் சொட்டு நீர் பாசனம் அமைப்பு வேளாண் உதவி இயக்குநர் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:12

ராமநாதபுரம்:இந்தியாவில் 40.20 லட்சம் எக்டேரில் சொட்டு நீர் பாசனம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக,வேளாண் உதவி இயக்குனர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.



போகலுார் வட்டார வேளாண் துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண் தொழில் நுட்ப முகமை விரிவாக்க சீரமைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர், உதவி வேளாண் அலுவலர் கதிரேசன் நுண்ணீர் பாசன திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்குவிளக்கினார்.அவர் கூறியதாவது:



வேளாண் உற்பத்திக்கு நிலம், நீர் மற்றும் இடு பொருட்களே அடிப்படை காரணிகளாகும். சாகுபடி நிலத்தின் அளவு பல்வேறு காரணங்களால் குறைந்து வருகிறது. பாசன நீரின் அளவு, பருவமழை, ஆறு, குளங்களில் நீர் இருப்பு, நிலத்தடி நீர் இருப்பு, ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்து கொண்டே வருகிறது. இருக்கின்ற நீரைக் கொண்டு அதிக பரப்பில் சாகுபடி செய்வது காலத்தின் கட்டாயமாகும்.




நுண்ணீர் பாசனம் அமைப்பதின் மூலம் பெருமளவில் நீரை சேமித்து கூடுதல் பரப்பில் பாசனம் செய்ய முடியும்.சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனத்தை விவசாயிகள் கடை பிடித்தால், குறைந்த நீரில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்து அதிகமான உற்பத்தியை பெறலாம். இந்தியாவில் தற்போது 40.20 லட்சம் எக்டேரில் சொட்டு நீர் பாசனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




பயிருக்கு தேவையான பாசன நீர் அறிவியல் ரீதியாக கணக்கிடப்பட்டு சரியான அளவு மட்டுமே அளிக்கப்படுகிறது.வேர் பகுதியில் மட்டுமே நீர் பாய்வதால், பாசன நீர் வீணாக்கப்படுவதில்லை. களை செடிகளுக்கு நீர் மற்றும் உரச்சத்து கிடைக்காததால் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மழையில்லா காலங்களில் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்கும் பகுதிகளுக்கு சிறந்த பாசன முறையாகும். இந்த முறையில் பருத்தி, நிலக்கடலை, தென்னை மற்றும் அனைத்து வகையான காய்கறிகள் பயிரிடலாம்.



நீர்த்தேவை,பயிரின் வயது, இடைவெளியை பொறுத்து பாசன முறையில் மாற்றம் செய்யலாம். இந்த பாசனத்தின் மூலம் நல்ல பயிர் வளர்ச்சி, அதிக மகசூல், நீர் சேமிப்பு, உற்பத்தி தரம் உயர்வு, உப்பு நீரையும் நல்ல முறையில் பாசனம் செய்யலாம். வேலையாள், மின் சக்தி, நிலம் சேதராமின்றி சேமிப்பு, மேடு பள்ளங்கள் பகுதிக்கு ஏற்றது. ஓரக்கசிவு, உறிஞ்சுதல், மூலம் ஏற்படும் நீரிழப்பு குறைவு.



வாய்க்கால் மூலம் 200 மீட்டர் கொண்டு செல்லும் போது 20 சதவீதம் நீரிழப்பு ஏற்படுகிறது என கணக்கிடப்பட்டுள்ளது. களைகள் முளைக்காது, உரம் வீணாவது இல்லை.நுண்ணீர் பாசன வசதிக்கு விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம், என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X