தீவன பற்றாக்குறையை எளிதாக தீர்க்கலாம் | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
தீவன பற்றாக்குறையை எளிதாக தீர்க்கலாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:12

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், தீவன பற்றாக்குறை நிலவுவதால், அசோலா தீவனம் வளர்த்து, அனைத்து வித கால்நடைகளுக்கும், தீவனமாக கொடுக்கலாம்.குறைந்த செலவில், அசோலா தீவனம் வளர்ப்பது குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையம் உதவி பேராசிரியர் கோபி கூறியதாவது:அசோலாவில், 30 சதவீதம் புரதச்சத்து; 15 சதவீதம் நார்ச்சத்து; 4 சதவீத கொழுப்பு சத்து; 20 சதவீதம் சாம்பல் சத்து உள்ளன.கோடை காலங்களில், தீவனம் பற்றாக்குறை ஏற்படும்போது, மாடுகளுக்கு, 1.5 கிலோவும்; ஆடுகளுக்கு, 300 கிராமும், கோழிகளுக்கு, 30 கிராம் வரையிலும், தீவனமாக கொடுக்கலாம்.



இத்தீவனத்தால், 20 சதவீதம் பால் உற்பத்தி, ஆடு மற்றும் முட்டைகளின் எடை அதிகரிக்கும்.கிலோ அசோலாவை தொட்டியில் வளர்க்கும் போது, 75 பைசா வரை செலவாகும். இதன் பயன், 50 ரூபாய் வரைக்கும் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 75300 52315அசோலா வளர்ப்பு முறைஅசோலா வயல்வெளி மற்றும் தொட்டிகளிலும் வளர்க்கலாம். தொட்டியில் வளர்க்கும் முறைக்கு, முதலில், 6 அடி நீளம், 3 அடி அகலம் உடைய பள்ளம் எடுக்க வேண்டும். பள்ளத்தில், 'பாலித்தீன் ஷீட்' போட்டு, 30 கிலோ செம்மண் பரப்ப வேண்டும். பின், 3 கிலோ சாணத்தை கரைத்து, செம்மண் மீது தெளிக்க வேண்டும்.



பள்ளத்தில், 10 செ.மீ., தண்ணீரை நிரப்ப வேண்டும். அதில், 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை குழியில் போட வேண்டும். ஒரு நாள் கழித்து, ஒரு கிலோ அசோலா விதைகளை குழியில் போட்டு, தண்ணீர் தெளிக்க வேண்டும். இரு வாரம் கழித்து, அசோலாவை தீவனத்தை அறுவடை செய்யலாம்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X