வாலாஜாபா : நெல்வாய் கிராமத்திற்கு, சுடுகாடு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.வாலாஜாபாத் அடுத்த, 144 தண்டலம் ஊராட்சியில், நெல்வாய் கிராமம் உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இங்கு வசிப்போருக்கு, சுடுகாடு மற்றும் குடிநீர் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகள் இல்லை.இதனால், இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது. நெல்வாய் கிராமத்திற்கு, சுடுகாடு அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.