| சுற்றுலா திட்டத்தை எதிர்த்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் Dinamalar
சுற்றுலா திட்டத்தை எதிர்த்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:17

ராமநாதபுரம்:மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி மிதவைகள் அமைப்பது மற்றும் தீவுகளை சுற்றுலா மயமாக்கும் வகையில் பாம்பனில் துவக்கவுள்ள சுற்றுலா படகு சவாரி திட்டத்தை கைவிடக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு கடல் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மாவட்ட தலைவர் முனியாண்டி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் சிவாஜி முன்னிலை வகித்தனர். பாம்பனில் குருசடை தீவையும், அதனை அடுத்துள்ள பூமரிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, சிங்கிலித்தீவு உள்ளிட்ட தீவுகளை இணைத்து துவக்கப்படவுள்ள சுற்றுலா படகு சவாரி திட்டமும், மீனவர் வருகையை தடுக்கும் நோக்கில் மிதவைகள் அமைக்கப்படுவதை எதிர்த்தும் தோப்புக்காடு, வேதாளை, பெரியபட்டினம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500க்கு மேற்பட்ட மீனவர்கள் பள்ளி மாணவர்கள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் சுற்றுலா திட்டத்தை கைவிடக்கோரியும், கடலில் மிதக்கவிட்டுள்ள மிதவை களை அகற்றக்கோரியும் வனத்துறைக்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். கோரிக்கை நிறைவேறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும், என்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X