| 3 குழாய்களும் அடைப்பு Dinamalar
3 குழாய்களும் அடைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:17

திருவள்ளூர் : திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள குடிநீர் தொட்டியில், இரண்டு குழாய்கள் அடைக்கப்பட்டும், மூன்றாவது குழாயில், திருகாணி உடைந்திருப்பதால், குடிநீர் பிடிக்க பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.திருவள்ளூர் தாலுகா அலுவலகம், ஜே.என்.சாலையில் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில், சர்வேயர் பிரிவு, இ - சேவை மையம், ஆதார் புகைப்படம் எடுக்கும் மையம், வட்ட வழங்கல் அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன.



இவ்வலுவலகத்திற்கு, தினமும், 100க்கும் மேற்பட்டோர், பல்வேறு பணி நிமித்தம் காரணமாக வந்து செல்கின்றனர். தற்போது, ஜமாபந்தி நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இந்த நாட்களில் மனு அளிக்க மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.பொதுமக்கள் குடிநீர் அருந்துவதற்காக, தாலுகா அலுவலகத்தில், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொட்டியில், இரண்டு குழாய்கள் நிரந்தரமாக மூடப்பட்டு உள்ளது. ஒரு குழாயில், தண்ணீர் திறக்கும், திருகாணி உடைந்துள்ளது. இதில், தண்ணீரை பெற மக்கள் சிரமப்படுகின்றனர்.எனவே, குடிநீர் தொட்டியில் எளிதில் தண்ணீர் பிடிக்கும் வகையில், குழாய்களை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X