| அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழியும் அபாயம்;குப்பை தொட்டியானதேவிப்பட்டினம் கடற்கரை Dinamalar
அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழியும் அபாயம்;குப்பை தொட்டியானதேவிப்பட்டினம் கடற்கரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:22

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் கடற்கரைப்பகுதியில் மீனவர்கள் குடியிருப்பு பகுதி குப்பையை போட்டு குப்பை தொட்டியாக்குவதால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



தேவிப்பட்டினத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். கடற்கரையிலேயே மீனவர்கள் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு களில்உள்ளவர்கள் குப்பையை கடற்கரையில் திறந்த வெளியில் வீசுகின்றனர். பிளாஸ்டிக் குப்பை உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கடலுக்குள் செல்வதால் அரிய கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.



இந்தப்பகுதி மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பகுதியாகும்.தேசிய கடல் பூங்கா என்பதால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடல் பகுதியில் அரிய கடல் வாழ் உயிரினங்களான கடல் பசு, கடல் குதிரை, கடல் அட்டை, ஆமை, கடற் புற்கள் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், பிளாஸ்டிக் கழிவுகளும் கடலுக்குள் செல்கிறது. இதனை அரிய கடல் வாழ் உயிரினங்கள் உண்ணும்போது பலியாகும் நிலை உள்ளது. இது போன்றஉயரினங்களின் பெருக்கத்தின் காரணமாகவே மீன் வளம் அதிகரிக்கும். அதற்கான சூழலை அழிக்கும் பணியில் அப்பகுதியினர் ஈடுபட்டு வருகின்றனர்.



வனத்துறை நடவடிக்கை தேவை:




தேவிப்பட்டினம் கடற்கரையில்தேசிய கடல் பூங்கா என்ற விளம்பர பலகை மட்டும் வைத்தால்போதாது. அப்பகுதி மக்களிடையே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது கடல் உள்வாங்கியுள்ளதால், கரைப்பகுதிகளை எளிதில் சுத்தம் செய்ய முடியும். பள்ளி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்களை வைத்து கடல் பகுதியை சுத்தம் செய்து சுகாதாரம் காக்க நடவடிக்கை எடுக்கை வேண்டும். அழிவிலிருந்து அரிய கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும். வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கடற்கரை குப்பை தொட்டியாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X