| ஊராட்சிகளில் ஜாத்திரை Dinamalar
ஊராட்சிகளில் ஜாத்திரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:22

திருத்தணி : ஊராட்சிகளில், நேற்று நடந்த ஜாத்திரையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுவழிபட்டனர்.திருத்தணி ஒன்றியம், கிருஷ்ணசமுத்திரம், வீரகநல்லுார் ஆகிய ஊராட்சிகளில், கங்கையம்மன் ஜாத்திரை, நேற்றுநடந்தது.விழாவையொட்டி, காலை, 8:00 மணிக்கு, எல்லையம்மன் மற்றும் அம்மன் கோவில்களில், மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைநடந்தது.தொடர்ந்து, கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.



பின், பூ கரகம் ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடந்தன.மாலை, 5:00 மணிக்கு, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து வழிபட்டனர்.இரவு, 7:30 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.பின், இரவு, 8:00 மணிக்கு, பூ கரகத்துடன் கங்கையம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 9:30 மணிக்கு, பெண்கள் கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடந்தது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X