| மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா Dinamalar
மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:23

கமுதி:கமுதி டி.இ.எல்.சி., நடுநிலைபள்ளியில் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், மாவட்ட செயலாளர் செந்தில் செல்வானந்த் தலைமையிலும், பள்ளி தாளாளர் ராஜேஸ், கமுதி ஒன்றிய செயலாளர் மதுரைவீரன், மாவட்ட துணை செயலாளர் ரஜினிமாரி முன்னிலையில் நடந்தது.



52 பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நோட்டு, புத்தகங்கள், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், வினாக்கள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.



விழாவில் கமுதி ஒன்றிய இணை செயலாளர் பாக்கியராஜ், நகர செலயாளர் ராம்குமார், இணை செயலாளர் பச்சமால், மாவட்ட மகளிரணி செயலாளர் சங்கீதா, இணை செயலாளர்கள் கோகிலா, இந்திரா, கமுதி மகளிரணி செயலாளர் கோமதி, துணை செயலாளர் அம்பிகா, மாவட்ட இணை செயலலாளர் செந்தில்வேல், வர்த்தக அணி செயலாளர் முருகானந்தம், விவசாய அணி மாவட்ட செயலாளர் சுப்பு, டாக்டர் வெங்கடேஷன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X