எல்லாத்தையும் விட்டுடணும் போல இருக்கு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:31

இ னி இரவு, 11:00 மணிக்கு மேல், 'ரமணா, துாங்குறியா?' என்று கேட்டு, ஒரு வெண்பாவைச் சொல்லி, கைப்பேசியில், சத்சங்கம் செய்ய ஆளில்லை.சு.ரவி, தன்னுடைய மகத்தான சீடன்,- நண்பனை இழந்துவிட்டான்.பாலாஜியும், நாடகக் குழுவினரும் எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்களோ!சாந்தமே வடிவான திருமதி நளினி...?வாழ்க்கை தொடரும். வலியைக் காலம் சரி செய்யும். வழிகள் மாறும்.



ஆனால், அவன் நம்மோடு இல்லை என்பது, நெருடத்தான் செய்யும்.ஆம், என் இனிய நண்பன், கிரேஸி மோகன் மறைந்து விட்டான். அதிலும், அவனுக்கு அவசரம் தான்; கொஞ்சம் நெஞ்சுவலி; கொஞ்சம் மூச்சுத் திணறல். எனினும், அவனே, வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.தம்பி பாலாஜி, உடைந்து போய் பகிர்ந்து கொண்ட மோகனின் கடைசி வார்த்தைகள் இதுதான்:'விவேகானந்தர், ரமணர், நம்ம பாரதியாரே போயிட்டார். நாம என்னடா பெருசா? நாமெல்லாம் போ வேண்டியவா தானே!'அவனை, நகைச்சுவை எழுத்தாளராக, திரைப்பட வசனகர்த்தாவாக, நடிகராக, நாடகக் கலைஞராக தான், உலகம் அறியும். சிலருக்கு, அவனுடைய, ஓவியக் கலைச் சிறப்பு தெரியும்.



நான் பல கூட்டங்களில் எடுத்துச் சொன்னாலும், அண்மையில் தான் அவனுடைய கவிதைத் திறமை, பகிரங்கமாக தெரிய வந்தது.மோகனுக்கு, புனேயிலிருக்கும் இன்னொரு நண்பன் சு.ரவி தான் இலக்கிய குரு. ரவி தான், மோகனுக்கு, யாப்பு கற்றுக் கொடுத்தான்.எதிலும், முழுமையான ஈடுபாடு, தீவிரம்-, இதுதான் மோகனின் உண்மை அடையாளம். வெற்றிலை, சீவல், புகையிலை போடுவதும் அப்படித்தான்; யாரோ சொன்னார்கள் என்று, 'கிரீன் டீ' குடிக்க ஆரம்பித்தான். அதுவே, ஒரு நாளைக்கு முப்பது முறை என்றானது.நம்பி ஈடுபடும் மனப்பாங்கும், அதை அப்படியே பற்றிக்கொள்ளும் தீவிரமும், அவன் கவிதையில் நுழைந்த போதும், அவனை பின் தொடர்ந்தன.மோகனுக்கு, கவிதை என்பது, ஒரு தவ வெறி போல் ஆயிற்று.



அவனே, 'இதென்னடா விடவே முடியல' என, அடிக்கடி கூறினான். அப்படி ஆரம்பித்த வெண்பாக்கள், அவனுடைய அன்றாட ஆராதனையாகின.நேற்று காலை, 10:40 மணிக்கு, மின்னஞ்சலில் வந்து சேர்ந்த அவனுடைய கடைசி வெண்பாக்கள் இவை:மற்கடக்(குரங்கு) குட்டியே, மாதா ரமணரைநிற்க அனுமதிப்பாய் நின்னுள்ளே -வர்க்கத்தின்பேதங்கள் போகும் பிறவிப் பிணிதீரும்மோதுங்கள் அண்ணா மலை...!வந்த மனக்குரங்கு வாயுள்ளே வாத்ஸல்யம்சந்திர வம்சத்து சூரியன் -பந்தமறுப்பு:முற்றும் துறக்க முனிவனாய் மாறலாம்கற்ற களவை மற... கிரேசி மோகன்...!'என்னடா தளை தட்டுகிறதே' என கேட்டால், 'தட்டிட்டுப் போட்டுமேடா... களைகட்டித்தானே இருக்கிறது' என சமாளிப்பான்.வெண்பாக்களில் நகைச்சுவைக்காக, ஆங்கிலச் சொற்களை அவன் கையாள்வதை, நான் ஆதரிக்காததில், அவனுக்கு சிறிது வருத்தம் தான்.'



ஏண்டா, காளமேகம், நகைச்சுவையா எழுதலையா?' என்பான். 'அவர் ஆங்கிலத்தில் எங்கடா எழுதினார்' என, நான் கேட்டால், 'சரி சரி' எனக்கூறி சிரிப்பான்.அவனுடைய நாடகத்தை, நான் பார்த்ததே இல்லை என்பதில், அவனுக்குப் பெரும் வியப்பு. ஒரு முறை, 'சாக்லேட் கிருஷ்ணா' நாடகத்தை, என் மனைவியுடன் பார்த்தேன்,அதனுடைய, 776வது நிகழ்ச்சியா என, நினைவில்லை. அதன் பாராட்டுக் கூட்டத்தை மட்டும், பார்த்துவிட்டு வந்தேன்.எங்கள் நட்புக்கும், அவனுடைய நாடக, திரைப்பட வெற்றிக்கும், சிறிதும் தொடர்பில்லை.கவிதையையும் கடந்து, அவனுள்ளே மிக ஆழமான ஆன்மிக ஏக்கம் இருந்தது.



அதை மிக உருக்கமாக, அவன் என்னிடம் அடிக்கடி பகிர்ந்து கொண்டிருக்கிறான். ரமணர், நிசர்கதத்த மஹராஜ், ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆகியோரை பற்றி, நான் அதிகம் பேசியிருக்கிறேன். சமீபத்தில் அவனுடைய 'ரமணாயணம்' வெளியானதும், அவன் மறைவுக்கு ஒரு, முகமன் தான் என்றால், அது மிகையில்லை.'நான் எல்லாத்தையும் அனுபவிச்சுட்டேண்டா. சாக்லேட் கிருஷ்ணா மாதிரி, பலமுறை, மேடை கண்ட நாடகம் கிடையாது; கமலோடு, ரஜினியோடு வேலை பார்த்தேன். இது போதும் டா' என், சமீபத்தில் அவன் கூறினான்.'ஆண்டவன் சொல்றான்; அருணாச்சலம் செய்றான்' போன்ற ரசிகர்கள் மனதில் நீங்காத வசனங்கள், எப்படிப் பிறந்தன என்பதைச் சொல்வான். மற்றபடி, என்னிடம், அவன் சினிமா பற்றி பேசியது குறைவு.'இந்த நாடகம், சினிமா எல்லாத்தையும் விட்டுடணும் போல இருக்குடா' என கூறுவான்.'எதையும் விட வேண்டாம். எத்தனை பேரை, கவலையை மறந்து சிரிக்க வைக்கிறாய்; எதை விட வேண்டுமோ, அது தானே விடுபடும்' என நான் கூறுவேன், அதற்கும், 'சரி சரி' என கூறுவான்.மகான்கள் அடைந்த, கூறிய, ஆன்மிக நிலையைத் தான் அடைய வேண்டும் என்ற ஏக்கம், சமீபகாலத்தில், அவனுள் தீயாக வளர்ந்தது.'எனக்கு அப்படி ஒரு பாக்கியம் கிடைக்குமாடா; வீணா சாகக் கூடாதுடா' என, என்னிடம் தொலைபேசியில், அவன், மனம் நெகிழ்ந்து கூறும் போதேல்லாம், 'நிச்சயம், அந்த நற்கதியை அடைவாய்' என, உறுதியளிப்பேன் நான்.அந்த நற்கதியை மோகன் அடைந்துவிட்டான். - அதுவும், நான்கு ஆண்டுகளுக்கு முன், என் குருநாதர், சற்குரு சிவானந்த மூர்த்தி மறைந்த, அதே ஜூன் 10ம் தேதி!- கலைமாமணி எஸ்.வி.ரமணன்

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X