| கழிவுநீர் கலந்து வரும் குடிநீர் கண்ணீருடன் பெண்கள் மறியல் Dinamalar
கழிவுநீர் கலந்து வரும் குடிநீர் கண்ணீருடன் பெண்கள் மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:32

கொருக்குப்பேட்டை : தண்ணீருக்காக, சாலை மறியலில் ஈடுபட்டு, பெண்கள் அழுது புலம்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.கொருக்குப்பேட்டை, திருநாவுக்கரசு தோட்டத்தில், 1 முதல், 5 தெருக்கள் உள்ளன. இங்கு, 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட, மக்கள் வசிக்கின்றனர்.இப்பகுதியில், ஆறு மாதங்களாக, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது; குழாய்களில் குடிநீர் வரவில்லை. லாரி தண்ணீரும் வழங்கப்படவில்லை.இது குறித்து, அதிகாரிகள் பலமுறை புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த, 100க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன், நேற்று மதியம், வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், அழுது புலம்பியபடி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இது குறித்து திருநாவுக்கரசு தோட்டம், 3வது தெருவை சேர்ந்த, எம்.சரஸ்வதி, 50, கூறியதாவது:தண்ணீர் இல்லாததால், குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்ப முடிவதில்லை. லாரி தண்ணீர் பிரதான சாலையில் மட்டுமே வருகிறது. சிறிய தெருக்களுக்கு வருவதில்லை. மற்ற தெருக்களில் தண்ணீர் பிடிக்கச் சென்றால், அப்பகுதியில் உள்ளோர், அவதுாறாக திட்டுவதுடன், குடங்களை காலால் உதைக்கின்றனர். இதனால், கடும் மன உளைச்சல் ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X