| வட்ட பாதையில் ரயில்கள் ரத்து Dinamalar
வட்ட பாதையில் ரயில்கள் ரத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:34

சென்னை : சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில்பாதையில், சிங்கபெருமாள்கோவில் ரயில்வே பணிமனையில், பராமரிப்பு பணி நடப்பதால், 'கடற்கரை - செங்கல்பட்டு - அரக்கோணம் - திருவள்ளூர் - கடற்கரை' வட்ட பாதை ரயில்,மூன்று நாட்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.l சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக, காலை, 9:20 மணிக்கு, சென்னை கடற்கரை நிலையத்துக்குஇயக்கப்படும் வட்ட பாதை மின்சார ரயில், இன்று, நாளை மற்றும் 14ம் தேதி ரத்துசெய்யப்பட்டுள்ளதுl



சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு காலை, 8:56 மணிக்கு இயக்கப்படும் ரயில், இன்று, நாளை மற்றும் 14ம் தேதிகளில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும்l சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு காலை, 9:38 மணி, 10:14 மணி, 11:02 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு காலை, 10:50 மணி, 11:50 மணி, நண்பகல், 12:15 மணி மற்றும் மதியம், 1:00 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே, இன்று, நாளைமற்றும் 14ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்த ரயில்கள்,தாம்பரம் - கடற்கரை இடையே இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X