போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:35

திருநங்கை உட்பட ஐவர் கைதுஆர்.கே.நகர்: தண்டையார்பேட்டை, ஜெ.ஜெ.நகர், மீனாம்பாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில், மதுபாட்டில்கள் பதுக்கி விற்பதாக, ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், நேற்று மதியம் நடத்திய சோதனையில், மதுபாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்ற, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த, குப்பம்மா, 60; சொக்கம்மாள், 62; நீலாவதி, 40; திருநங்கை மீனா, 58, மற்றும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சுஜித்ரா, 46, ஆகிய ஐந்து பேரை கைது செய்து, 71 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.மொபைல் பறித்த இருவர் கைதுஓட்டேரி: ஆவடியைச் சேர்ந்தவர், தங்கராசு, 65; ஓய்வு பெற்ற ராணுவ வீரர். புளியந்தோப்பில், கட்டுமானப் பணியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், காவலாளியாக உள்ளார். நேற்று காலை, பெரம்பூரில் பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது, இருவர், மொபைல் போனை பறித்து தப்பினர். விசாரித்த ஓட்டேரி போலீசார், புளியந்தோப்பு, ஸ்டிபன்சன் சாலையில், சந்தேகத்தின் அடிப்படையில், இருவரை பிடித்து விசாரித்தனர். இதில், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன், 31, ராமு, 36 என்பதும், தங்கராசுவிடம் மொபைல் பறித்தவன்கள் என்பதும் தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.மூதாட்டி பலாத்காரம் செங்குன்றம்: செங்குன்றம், நாரவாரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுலோச்சனா, 70. தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணி அளவில், அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும், ஆரோக்கியசாமி, 43, என்பவன், கஞ்சா போதையில், மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளான். அவர், உதவி கோரி, குரல் கொடுத்த போது, அடித்து, கொலை செய்து விடுவதாக மிரட்டினான். மயங்கி கிடந்த மூதாட்டியை, உறவினர்கள், ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பியோடிய ஆரோக்கியசாமியை, செங்குன்றம் போலீசார் தேடி வருகின்றனர்.மணல் கடத்தியவன் கைதுபட்டாபிராம்: பட்டாபிராமைச் சேர்ந்தவன், குமார், 30. நேற்று முன்தினம் காலை, பட்டாபிராம் நோக்கி, லாரியில், மணல் ஏற்றி சென்று கொண்டிருந்தான். அப்போது, தண்டுரை அருகே, கிராம நிர்வாக அலுவலர், ஜெயந்தி, உதவி ஆய்வாளர் தீபா ஆகியோர், லாரியை மடக்கி பிடித்தனர். விசாரணையில், இரண்டு யூனிட் மணல், லாரியில் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், குமாரை, நேற்று முன்தினம் இரவு, கைது செய்து, சிறையில் அடைத்தனர்.பெண்ணிடம் செயின் பறிப்புவளசரவாக்கம்: காரம்பாக்கம், மோதி நகரைச் சேர்ந்தவர், நாகலட்சுமி, 85; ரயில்வேயில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது, 5 சவரன் செயினை பறித்து தப்பினர். வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.3 திருடன்களுக்கு, 'குண்டாஸ்'சென்னை: போரூரைச் சேர்ந்தவன், பாலாஜி, 23; கொலை மற்றும் ஐந்து திருட்டு வழக்குகள் உள்ளன. தேனாம் பேட்டையைச் சேர்ந்தவன், பழனி, 39; இவன் மீது, ஒரு கொலை, 14 திருட்டு வழக்குகள் உள்ளன. அதேபோல, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவன், மணிகண்டன், 24. இவன் மீது, மூன்று செயின் பறிப்பு வழக்குகள் உள்ளன. மூவரையும், கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்படி, போலீசார், நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்தனர்.'போக்சோ'வில் இருவர் கைதுபுளியந்தோப்பு: புளியந்தோப்பு, சூளை பகுதியைச் சேர்ந்தவன், ரஞ்சித், 20; மலர் அலங்காரம் செய்து வருபவன். இவன், 16 வயது சிறுமியை, நான்கு ஆண்டுகளாக காதலித்துள்ளான்.அந்த சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் பெற்றோர், புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரையடுத்து, நேற்று அவனை, 'போக்சோ' சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.l ஆயிரம்விளக்கு: அரும்பாக்கத்தைச் சேர்ந்த, 14 வயது சிறுமியின் பெற்றோர், நேற்று முன்தினம் இரவு, ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில், புகார் மனு ஒன்றை அளித்தார். 'அரக்கோணத்தைச் சேர்ந்த, அசாருதீன், 20, என்பவன், தன் மகளிடம் ஆசைவார்த்தை கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான்.'இதனால், மகளின் உடல்நலம் பாதித்துள்ளது. எனவே, அவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டு இருந்தார். ஆயிரம்விளக்கு போலீசாரின் விசாரணையில், அசாருதீன் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவனை நேற்று, 'போக்சோ' சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.மாவா விற்ற இருவர் கைதுபுளியந்தோப்பு: புளியந்தோப்பு, கே.எம்.கார்டனில், 'மாவா' விற்பதாக கிடைத்த தகவலையடுத்து, புளியந்தோப்பு போலீசார், சோதனையில் ஈடுபட்டனர். சூளையைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, 47, கே.எம்.கார்டனைச் சேர்ந்த துரை, 59, ஆகியோர், மாவா விற்றது தெரிந்தது. அவர்களிடம் இருந்த, 7 கிலோ மாவா, பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணவேணி, துரை ஆகிய இருவரையும், நேற்று கைது செய்த போலீசார், தப்பியோடிய துரையின் மனைவி கன்னியம்மாள், 52, அவரது மகள் கவிதாவை தேடி வருகின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X