செங்குன்றம் : தொழிலாளர் துறை சார்பில், உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின, கையெழுத்து இயக்க விழிப்புணர்வு நடந்தது.உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, செங்குன்றத்தில், திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் துறை, உதவி கமிஷனர் வளர்மதி தலைமையில், கடை மற்றும் தொழிலகங்களில், குழந்தை தொழிலாளர் உள்ளனரா என, ஆய்வு செய்யப்பட்டது.பின், செங்குன்றம் காவல் நிலையம் எதிரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில், கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது. அவர்களுடன், கடைகளின் உரிமையாளர்கள், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.