| ஏரி பூங்காவை திறக்க ஏற்பாடு Dinamalar
ஏரி பூங்காவை திறக்க ஏற்பாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:39

ஆவடி பருத்திப்பட்டு ஏரி சுற்றுச்சூழல் பூங்காவை, முதல்வர், இ.பி.எஸ்., 15ல் திறக்கவுள்ளார். ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் உள்ள ஏரி சீரழிந்து கிடந்தது. இதை புனரமைக்க வேண்டும் என, மக்கள், கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, இந்த ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க, அரசு முடிவெடுத்தது. இதற்காக, 30 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்தது. பொதுப்பணித் துறை வாயிலாக, ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, இப்பணிகள் நடந்து வந்தன. தற்போது, பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.



பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, 15ம் தேதி, முதல்வர், இ.பி.எஸ்., பூங்காவை திறக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை, சென்னை மண்டல நீர்வளத் துறையினர் செய்து வருகின்றனர். ஏரியின் இறுதிக்கட்ட பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு வருகின்றன.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X