| விடுதி மாணவர்களுக்கு பயிற்சி Dinamalar
விடுதி மாணவர்களுக்கு பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:41

சென்னை, : ஜெர்மனி கால்பந்தாட்ட பயிற்றுனர், தமிழ்நாடு விளையாட்டு விடுதி மாணவ - மாணவியருக்கு பயிற்சியளித்தார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 'பயிற்றுனருக்கும், பயிற்சியாளருக்கு பயிற்சியளிக்கும்' திட்டத்தின் கீழ், விளையாட்டு விடுதி மாணவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், ஜெர்மனி கால்பந்தாட்ட பயிற்றுனர், வில் டீருடு மெல்பம் ஸ்டெல்லர் பயிற்சி அளித்தார்.



தமிழகத்தில், எட்டு மாவட்டங்களில் செயல்பட்டு வரும், மாணவியர் விடுதிகள் மற்றும், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் மாணவர் விடுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், கால்பந்து பயிற்றுனர்கள், சம்மேளன பயிற்சியாளர்கள் என, 339 பேருக்கு பயிற்சியளித்தார்.இதில், கால்பந்து விளையாட்டின் உயர் நுட்பம், தற்போதைய விதிமுறைகள் மற்றும் பன்னாட்டு தரத்திலான பயிற்சியை வழங்கினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X