| குடிசை மாற்று வாரிய வளாகத்தில் ஊராட்சி சேவை மையம் Dinamalar
குடிசை மாற்று வாரிய வளாகத்தில் ஊராட்சி சேவை மையம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:42

சென்னை : பெரும்பாக்கம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில், 21 லட்சம் ரூபாயில், ஊராட்சி சேவை மையம் கட்டப்படுகிறது.பெரும்பாக்கம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 20 ஆயிரத்து, 376 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த பகுதி, காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் ஊராட்சி எல்லையில் உள்ளது.ஆனால், குப்பை மற்றும் சுகாதார பணிகளை, மாநகராட்சி செய்து வருகிறது. வரி வசூல், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை, ஊராட்சி நிர்வாகம் செய்கிறது.



இந்த குடியிருப்பு பகுதியை, சென்னை, மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கை, அரசு உத்தரவுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில், அதே வளாகத்தில், ஊராட்சி சார்பில், 21 லட்சம் ரூபாயில், 1,000 சதுர அடி பரப்பளவில், ஊராட்சி சேவை மைய கட்டடம் கட்டப்படுகிறது.இதில், வரி வசூல் மையம் மற்றும் பெண்கள் சுயஉதவிக்குழு வாழ்வாதார இயக்கம் ஆகியவை செயல்பட உள்ளன. கட்டுமான பணி, வேகமாக நடைபெற்று வருகிறது.அடுத்த மாத இறுதியில், அனைத்து பணிகளையும் முடிக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X